சென்னை: அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில், நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்கம் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தப் படத்தை ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் சித்துகுமார் இசையமைக்கிறார்.
பிளாக்ஷிப் நிறுவனத்தின் இணை தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்துள்ளார். ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டர் வருண் கே.ஜி, கலையமைப்பு வினோத் ராஜ்குமார், டிசைன் சந்துரு, ஆடை வடிவமைப்பு மீனாட்சி உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.
மேலும், முக்கிய கதாபாத்திரங்களில் ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா ராஜ்குமார், இயக்குநர் ஏ.வெங்கடேஷ், கஜராஜன், ஜென்சன் திவாகர் ஆகியோர் நடிக்கின்றனர். இன்று தொடங்கி இரண்டே மாதங்களில் படப்பிடிப்பை முடித்து, இந்த வருடத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருமணமான ஆண்களின் பிரச்னைகளைப் பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லப் போகும் முதல் திரைப்படமாக நிச்சயம் இந்தப்படம் இருக்கும் என இயக்குநர் கலையரசன் தங்கவேல் கூறினார். முன்னதாக, ரியோ ராஜ் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்திற்கு பிறகு ஜோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஜோ படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், இப்படமும் அதேபோல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:"மனோபாலாவைப் போல உயரத்தை தொட்டவரும் இல்லை, விழுந்தவரும் இல்லை" - பூச்சி முருகன் நெகிழ்ச்சி! - ACTOR MANO BALA DEATH ANNIVERSARY