சென்னை: வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 14வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் டி.ஜி.சீத்தாராம் தலைமை ஏற்று விழா பேருரை ஆற்றினார். வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நிறுவனர், வேந்தர் ஐசரி கணேஷ் தலைமையில் இந்த பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
மேலும் சந்திரயான் 3 திட்ட இயக்குநர் இஸ்ரோ வீரமுத்துவேல், நடிகர் ராம் சரண், trivitron health care நிறுவனர் ஜிஎஸ்கே வேலு, இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் பத்மஸ்ரீ சரத் கமல் ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஐசரி கணேஷ் மற்றும் ராம் சரண் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராம்சரண், "என்னை அழைத்து இதுபோன்ற மரியாதை செய்ததற்கு கணேஷ் சாருக்கு நன்றி. என் அம்மா எனக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதை நம்பவில்லை.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவன். இன்று பட்டதாரிகள் அனைவரும் ராணுவ வீரர்கள் போல் இருக்கின்றனர். அவர்கள் முன்பாக எனக்கு இந்த மரியாதை கொடுத்ததற்கு நன்றி. இந்த விருது எனதல்ல, எனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முக்கியமாக எனது ரசிகர்களுடையது. டாக்டர் பட்டத்தை பயன்படுத்துவீர்களா என்ற கேள்விக்கு ராம்சரண் யோசிப்பேன் என பதிலளித்தார். மேலும் எனது அப்பா, எனது மனைவியின் தாத்தா, 80 சதவீத தெலுங்கு சினிமா கலைஞர்கள் சென்னையில் இருந்துதான் வாழ்க்கையை தொடங்கினார்கள்.