சென்னை:ஹைதராபாத்திற்கு படப்பிடிப்பிற்கு செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜன.29) சென்னை விமானநிலையத்திற்கு வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, "லால் சலாம் படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, படம் நன்றாக வந்திருக்கிறது. இப்படம் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சங்கி குறித்து பேசிய விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சங்கி என்பது கெட்ட வார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கும் கூறவில்லை. அப்பா ஆன்மீகவாதி. அவர் அனைத்து மதங்களையும் விரும்புபவர். எனவே, அவரை ஏன் அப்படி அனைவரும் கூறுகிறார்கள் என்பது அவரின் கருத்து” எனத் தெரிவித்தார். பின்னர், விமான நிலையத்தில் ரசிகர்களுடம் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.