சென்னை: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'குட் பேட் அக்லி' (good bad ugly). தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
படக்குழு 'குட் பேட் அக்லி' திரைப்படம் வரும் 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ள நிலையில், படப்பிடிப்பு கிட்டதட்ட முடிந்துள்ளது. அஜித் ஒரே நேரத்தில் ’விடாமுயற்சி’ மற்றும் 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருவதால் சற்று தாமதமாவதாக படக்குழு வட்டாரத்தில் பேசப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகர் பிரசன்னா நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், பிரசன்னா தனது சமூக வலைதள பகக்த்தில் அதனை உறுதி செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆம், உண்மைதான். நான் அஜித்குமார் படத்தில் நடிக்கிறேன். எனது கனவு நினைவாகியுள்ளது. மங்காத்தா முதல் ஒவ்வொரு அஜித் படம் அறிவிக்கப்படும் போது நான் நடிப்பதாக தகவல் வெளியாகும், அஜித் ரசிகர்களும் எனக்கு வாழ்த்து தெரிவிப்பதுண்டு.