தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

திருப்பாச்சி, சிவகாசி சல்மான் கானின் ஃபேவரைட்.. பிரபுதேவா பேச்சு! - Prabhu deva about salman khan - PRABHU DEVA ABOUT SALMAN KHAN

Prabhu Deva about Salman Khan: நடிகர் சல்மான் கான் திருப்பாச்சி, சிவகாசி படங்களை பாராட்டுவார் என்றும், இயக்குநர் பேரரசுவிற்கு சல்மான் கான் மிகப்பெரிய ரசிகர் என்றும் பிரபுதேவா கூறியுள்ளார்.

பிரபுதேவா புகைப்படம்
பிரபுதேவா (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Entertainment Team

Published : Sep 20, 2024, 11:14 AM IST

சென்னை:பிரபு தேவா, வேதிகா, சன்னி லியோன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட ராப்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று நடைபெற்றது. இதில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரபுதேவா, “ஊடகத்தை பார்க்கும் போது பயமாக இருந்தது. ஏனென்றால் அவ்வளவு கலாட்டா செய்துள்ளேன், ஏடாகூடமான கேள்விகள் வரும் என்று பயந்தேன். சின்ன குழந்தைகள் தப்பு செய்தால் அம்மா கூறுவதை கேட்டுவிட்டு பிறகு தவறு செய்யாது, அதுபோல் மீடியா எனக்கு தாய் போன்றது என்றார்.

மேலும், நான் 11ஆம் வகுப்பை தாண்டவில்லை, என்னுடன் அதிகம் படித்தவர்களைப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கும். நான் படிக்கும் போது யாரும் பதினோராம் வகுப்பில் ஃபெயில் ஆக மாட்டார்கள். அப்படி இருக்கும் போது நான் ஃபெயிலானேன். நான் எம்ஜிஆர் ரசிகன். நடிகர் சல்மான் கான் திருப்பாச்சி படத்தை மிகவும் பாராட்டுவார். இயக்குநர் பேரரசுவிற்கு சல்மான் கான் மிகப்பெரிய ரசிகர்.

அதேபோல், சிவகாசி படமும் அவருக்கு பிடிக்கும், இயக்குநர் பேரரசுவை சல்மான் கான் பாராட்டுவார் எனக் கூறினார். மேலும் பேசுகையில், சன்னி லியோன் எல்லோருக்கும் நல்ல மரியாதை கொடுப்பார். நிறைய உதவிகள் செய்வார். பேட்ட ராப் என்ற தலைப்பு வந்ததற்கு காரணமான இயக்குநர் சங்கருக்கு மிக்க நன்றி. அந்தப் பாடலை எனக்கு இசை அமைத்து கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி" என்றார்.

இதையும் படிங்க:பரபரப்பாக பேசப்படும் குக் வித் கோமாளி மணிமேகலை பிரச்சனை... காட்டமாக பதிலளித்த புகழ்! - Actor pugazh about CWC issue

இதனைத் தொடர்ந்து நடிகை வேதிகா பேசுகையில், "நிறைய நாட்களுக்குப் பிறகு படத்தில் நடனம் ஆடி இருக்கிறேன். அதுவும் பிரபுதேவாவுடன் ஆடுவது நீண்ட நாள் கனவாக இருந்தது. அது பேட்ட ராப் படம் மூலம் நிறைவேறியுள்ளது. அவருடன் நடனம் ஆட நிறைய பயிற்சி செய்தேன். வடநாட்டில் இருக்கும் எனது நண்பர்கள் பிரபுதேவா உடன் நடிப்பதை அறிந்து மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். இந்த படத்தில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகம் அடைவார்கள்” என்று பேசினார்.

ABOUT THE AUTHOR

...view details