சென்னை: இந்திய அளவில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் ஹிந்தி மொழியில் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து மொழியிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழில் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பம் முதலே தமிழில் பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இந்த வருடம் பிக் பாஸ் 8வது சீசனில் இருந்து விலகப்போவதாக தகவல் வெளியானது. கமல்ஹாசன் தக் லைஃப், கல்கி 2ஆம் பாகம், இந்தியன் 3 என பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியிருப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக இன்று கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், 'கனத்த இதயத்துடன், நான் ஏழு வருடங்களுக்கு முன் தொடங்கிய பயணத்தில் இருந்து தற்காலிகமாக விலகுகிறேன். பல திரைப்படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால், என்னால் இந்த வருடம் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்க முடியவில்லை. எனக்கு உங்கள் வீடுகளிலிருந்து தரும் அன்பிற்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இந்திய அளவில் சிறந்த ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக விளங்குகிறது.