மும்பை (மகாராஷ்டிரா): ஆர்ஆர்ஆர் பட நடிகர் ஜூனியர் என்டிஆர், பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், ஆலியா பட், ஹிருத்திக் ரோஷன், அவரது காதலி சபா ஆசாத் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு பிரபல ஹோட்டலில் ஒன்றாக உணவருந்தினர். இவர்கள் அனைவரும் ஹோட்டலுக்குள் நுழையும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கும் ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷனுடன் வார் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடந்த சில நாட்களாக மும்பையில் தங்கி உள்ளார். இதனிடையே நேற்று மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகியோர் வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து ஹிருத்திக் ரோஷன் அவரது காதலி சபா ஆசாத்துடன் வருகை புரிந்தார்.
ஒரே இடத்தில் கூடிய பிரபலங்களை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கூடினர். இதன் காரணமாக இவர்கள் விரைவாக ஹோட்டலுக்குள் அழைத்து செல்லப்பட்டனர். இதை பார்ப்பராசி புகைப்பட கலைஞர்கள் வீடியோவாக எடுத்து, தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டு உள்ளனர். இவை சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஹோட்டலுக்கு வருகை தந்த நடிகர் ஆலியா பட், வெள்ளை மற்றும் மஞ்சள் கலந்த மேக்ஸி ஆடை அணிந்திருந்தார்.
ரன்பீர், என்டிஆர் மற்றும் கரண் ஜோஹர் ஆகியோர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். மேலும் ஹிருத்திக் ரோஷன் ஜீன்ஸ் சட்டை மற்றும் தொப்பியுடன் வருகை புரிந்திருந்தார். ஜூனியர் என்டிஆர் மற்றும் ஆலியா பட் ஆர்ஆர்ஆர் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூனியர் என்டிஆர், ஹிருத்திக் ரோஷன் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் தற்போது வார் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:அஜித் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து.. குட் பேட் அக்லி படத்தின் சுவாரஸ்ய அப்டேட்! - GOOD BAD UGLY Update