தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அல்லு அர்ஜுன் வெளியிட்ட 'சாலா' பட டிரெய்லர்... ரசிகர்கள் வரவேற்பு! - saala movie trailer - SAALA MOVIE TRAILER

saala movie trailer: தீரன், ரேஷ்மா வெங்கடேசன், அருள்தாஸ், ஸ்ரீநாத் நடிப்பில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியாகவுள்ள சாலா படத்தின் டிரெய்லரை நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டுள்ளார்.

சாலா பட நடிகர் தீரன்
சாலா பட நடிகர் தீரன் (Credits - People Media Factory)

By ETV Bharat Entertainment Team

Published : Aug 7, 2024, 6:02 PM IST

சென்னை: தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி, 'சாலா' என்னும் நேரடி தமிழ் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. T.G. விஷ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபொட்லா இணை தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ்.டி. மணிபால் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

சமீபத்தில் வெளியாக இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து 'சாலா' டிரைலரை சமீபத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெளியிட்டார். இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ஆகஸ்ட் 23ஆம் தேதி 'சாலா' வெளியாகிறது.

'சாலா' படத்தில் தீரன், ரேஷ்மா வெங்கடேசன், 'மெட்ராஸ்' புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'சாலா' படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

இத்திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், "வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடத்தை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்" என்றார்.

'சாலா' திரைப்படத்திற்கு ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்க, படத்தொகுப்பை புவன், சண்டை பயிற்சியை மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர் ராம், நடன இயக்குநராக நோபுள் பணியாற்றியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க:'அவெஞ்சர்ஸ்' படத்திற்காக பிரமாண்ட ஹாலிவுட் இயக்குநருடன் இணையும் தனுஷ்? - Dhanush in avengers movie

ABOUT THE AUTHOR

...view details