தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் - ரசிகர்கள் கொண்டாட்டம்! - பில்லா

Billa Re-release: நடிகர் அஜித் நடித்த பில்லா திரைப்படம் இன்று (பிப்.23) ரீ ரிலீஸ் ஆனதை தொடர்ந்து, திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ்
நடிகர் அஜித்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 1:38 PM IST

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பில்லா என்கிற படத்தை, இயக்குநர் விஷ்ணுவர்தன் கடந்த 2007ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ரீமேக் செய்திருந்தார். இத்திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதுடன் வசூலையும் குவித்தது. பில்லா திரைப்படம் நடிகர் அஜித்தின் திரை வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாகும்.

இதில், நடிகர்களான நயன்தாரா, பிரபு, நமீதா, ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பேசப்படுகிறது. இந்நிலையில், தற்போது தமிழ் திரையுலகில் புதிய ட்ரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது.

பிரபல நடிகர்களின் பிறந்தநாள் மற்றும் படத்தின் ஆண்டு விழா நாட்களில், அவர்களது வெற்றிப் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து வருகின்றனர். இது ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருவதால், திரையரங்குகளின் உரிமையாளர்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த சில வாரங்களில் வாரணம் ஆயிரம், 3, ஆயிரத்தில் ஒருவன், மின்னலே, புதுப்பேட்டை, அண்ணாமலை, காதலுக்கு மரியாதை, சிவா மனசுல சக்தி, திருமலை உள்ளிட்ட படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா திரைப்படம், இன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும், அஜித் நடித்த வாலி, காதல் மன்னன், சிட்டிசன் ஆகிய படங்கள் அடுத்த வாரம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது. விஜயின் கில்லி திரைப்படம் ஏப்ரல் மாதம் மீண்டும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வெளியாகி மெகா ஹிட்டான படங்கள், மீண்டும் வெளியிடப்படுவது ரசிகர்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க:கற்பு பூமி பட விவகாரம்.. சென்சார் போர்டுக்கு எச்சரிக்கை விடுத்த திருமாவளவன்!

ABOUT THE AUTHOR

...view details