ETV Bharat / entertainment

”அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம்” செய்தியாளர்களிடம் கடிந்து கொண்ட ரஜினிகாந்த்! - RAJINIKANTH

Rajinikanth: ’கூலி’ திரைப்பட படப்பிடிப்பிற்கு புறப்பட்ட ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் அரசியல் குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என கடிந்து கொண்டார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 11:23 AM IST

சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டம் என செய்தியாளரகளிடம் கடிந்து கொண்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் ஷபீர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’கூலி’. பரபரவென நகரும் ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்துடன் இணைவது இதுவே முதல் முறை.

அதுவும் பெரும் நட்சத்திர பட்டாளத்துடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கூலி படப்பிடிப்பு ஏற்கனவே தமிழ்நாடு, ஐதராபாத், கடப்பா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில், தற்போது தாய்லாந்து நாட்டின் தலைநகர் பேங்காங்கில் அடுத்த கட்ட படப்பிடிப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நாட்டின் பாங்காக் தலைநகருக்கு விமான மூலம் புறப்பட்டு சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வந்த போது, அவரது ரசிகர்கள் தலைவா என்று கோஷம் எழுப்பி கத்தினர். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் ரசிகர்களிடம் போதும் கத்த வேண்டாம் என அறிவுரை வழங்கினார்.

ரஜினிகாந்த் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கூலி திரைப்படத்தின் பணிகள் 70 சதவிதம் முடிவடைந்துள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பாங்காக்கில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்துள்ளதாக எழுப்பிய கேள்விக்கு, ”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம் என்று பலமுறை உங்களிடம் தெரிவித்து விட்டேன்” என்று கடிந்து கொண்டார்.

இதையும் படிங்க: ’கேம் சேஞ்சர்’ படத்திற்கு ரெட் கார்ட்?... தமிழ்நாட்டில் திட்டமிட்டபடி வெளியாகுமா? - GAME CHANGER RELEASE ISSUE

பின்னர் ரஜினிகாந்த் ரசிகர்களிடம் அமைதியாக இருக்ககுமாறு தெரிவித்து புறப்பட்டுச் சென்றார். ரஜினிகாந்த் கடைசியாக டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ’வேட்டையன்’ திரைப்படத்தில் நடித்தார். அப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. என்கவுண்டர் கொலையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட வேட்டையன் திரைப்படம் அரசியல் தொடர்பான பல விவாதங்களை கிளப்பியது. அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கூறிய ரஜினிகாந்த், பிறகு கரோனா தொற்று காரணமாக அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என அறிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.