ETV Bharat / entertainment

பிக்பாஸ் வீட்டில் வந்தவுடன் பஞ்சாயத்தை தொடங்கிய ஆர்னவ், சுனிதா; விறுவிறுப்பான ப்ரோமோ வெளியீடு! - BIGG BOSS 8 TAMIL

Bigg Boss 8 tamil: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுனிதா, வர்ஷினி, ஆர்னவ் ஆகியோர் நுழைந்துள்ளனர்.

பிக்பாஸ் சுனிதா, ஆர்னவ்
பிக்பாஸ் சுனிதா, ஆர்னவ் (Credits - arnaavactor Instagram Account, Sunita Gogoi Instagram Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Jan 7, 2025, 12:28 PM IST

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்று சுனிதா, வர்ஷினி, ஆர்னவ் ஆகியோர் என்ட்ரி கொடுத்துள்ளனர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி தற்போது 90 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. கடந்த 7 சீசனாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த வாரம் எவிக்‌ஷனில் ராணவ் மற்றும் மஞ்சரி ஆகியோர் வெளியேறினர். பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், போட்டி விறுவிறுப்படைந்துள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் 8 நபர்களே உள்ள நிலையில், இந்த வாரம் வைல்ட் கார்ட் நாக் அவுட் சுற்று வைக்கப்பட்டது. இந்த சுற்றில் பிக்பாஸ் வீட்டில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் அனுப்பப்படுவர். இதன்மூலம் பிக்பாஸ் போட்டி விறுவிறுப்படையும்.

அந்த போட்டியாளர்கள் தற்போது உள்ள போட்டியாளர்கள் பற்றி தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர். இந்நிலையில் இன்று வெளியான முதல் ப்ரோமோவில், சுனிதா மற்றும் வர்ஷினி ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ப்ரோமோ இன்று (ஜன.07) காலை வெளியானது. சுனிதா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வேகத்தில் ஜாக்குலின், விஷால் ஆகியோரை குறித்து வார்த்தைகளால் விளாசித் தள்ளினார்.

விஷால், அன்ஷிதா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் காதலித்து வருவதாக பார்ப்வையாளர்களிடையே கருத்து நிலவியது. இதுகுறித்து சுனிதா, விஷாலிடம் கேள்வி கேட்டார். அதற்கு விஷால் மழுப்பலாக பதில் அளித்தார். இது ஒரு புறம் இருக்க, தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஆர்னவ் பிக்பாஸ் வீட்டிற்குள் ஆஜராகியுள்ளார். முன்னதாக பிக்பாஸ் வீட்டை விட்டு எவிக்டான போதும், விஜய் சேதுபதி முன்பே போட்டியாளர்களை திட்டிய ஆர்னவ் மீண்டும் நுழைந்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ”அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம்” செய்தியாளர்களிடம் கடிந்து கொண்ட ரஜினிகாந்த்! - RAJINIKANTH

தற்போதும் வந்தவுடன் ஜெஃப்ரியிடம் பஞ்சாயத்து செய்ய அவரை தேடினார். மேலும் மற்ற போட்டியாளர்கள் ஆர்னவை பேசவிடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் எலிமினேட் செய்யப்பட்ட பல போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதி வாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.