தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

சோயாபீன் எண்ணெய்யால் சரிந்த பாமாயில் இறுக்குமதி! - PALM OIL

தென் அமெரிக்காவிலிருந்து குறைந்த விலையில் சோயாபீன் எண்ணெய் கிடைத்ததால், கடந்த மாதத்தில் இந்தியாவில் பாமாயில் இறக்குமதி கணிசமாக சரிந்ததாக தொழில்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 9:41 AM IST

புதுடெல்லி: சோயாபீன் எண்ணெய் இறக்குமதி 2024 டிசம்பரில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து 4,20,000 டன்னாக உயர்ந்தது. இது கடந்த ஆண்டு 152,650 டன்னாக இருந்தது என்று சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது, இதனால் நுகர்வோர் போட்டித்தன்மை என்பது தென் அமெரிக்காவின் சோயாபீன் எண்ணெய்க்கு மாறத் தூண்டியதாக எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.வி. மேத்தா கூறினார்.

பாமாயிலின் சந்தைப் பங்கு 2024 டிசம்பரில் 42 சதவீதமாகக் சரிந்தது. அதே நேரத்தில் சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதியில் 58 சதவீதத்தைக் கைப்பற்றின.

கச்சா பாமாயில் இறக்குமதி ஒரு வருடத்திற்கு முன்பு 6,20,020 டன்னாக இருந்த நிலையில், 47.32 சதவீதம் சரிந்து கடந்த டிசம்பரில் 3,26,587 டன்னாக இருந்தது.

சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2023 டிசம்பரில் 2,60,850 டன்னாக இருந்து 264,836 டன்னாக அதிகரித்துள்ளது. மொத்த தாவர எண்ணெய் இறக்குமதி 2024 டிசம்பரில் 1.23 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது, இது ஒரு வருடத்திற்கு முன்பு 1.31 மில்லியன் டன்னாக இருந்தது.

இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு பாமாயிலை வழங்கும் முதன்மை நாடுகளாக உள்ளன, அதே நேரத்தில் அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் ரஷ்யாவிலிருந்து சோயாபீன் எண்ணெய் பெறப்படுகிறது. கச்சா சூரியகாந்தி எண்ணெயை ரஷ்யா, உக்ரைன் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து இந்தியா இறக்குமதி செய்கிறது.

ABOUT THE AUTHOR

...view details