மும்பை: உலக அளவில் தங்கம் மிகவும் மதிப்புமிக்க சொத்துகளில் ஒன்றாக திகழ்கிறது. தங்கமானது, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், மங்களகரமான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுவதுமாக உள்ளதோடு மட்டுமின்றி, இக்கட்டான நேரங்களில் உடனடியாக கடன் வசதிகளை பெறும் ஆபத்பாந்தவனாகவும் உள்ளது.
கடன் வாங்குபவர்கள் சாதகமான கடன் விதிமுறைகளையும், சிறந்த வாடிக்கையாளர் சேவையையும் பெறுவதற்கு சரியான தங்கக் கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமானது. தங்கக் கடன் என்பது ஒரு நிதி நிறுவனத்திடமிருந்து நிதியைப் பெறுவதற்காக கடன் வாங்குபவர்கள் தங்கள் தங்க நகைகள் அல்லது ஆபரணங்களை பிணையமாக அடமானம் வைக்கும் ஒரு பாதுகாப்பான கடன் ஆகும்.
கடன் தொகையானது பொதுவாக தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பின் சதவீதமாகும். இது கடன்-மதிப்பு விகிதம் (எல்டிவி) என அழைக்கப்படுகிறது. விரைவாக பணமாக்குதல், குறைந்தபட்ச ஆவணங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் விருப்பங்களில் வாடிக்கையாளர்களுக்கு நெகிழ்வுத்தன்மை போன்ற அம்சங்கள் காரணமாக தங்கக் கடன்கள் மக்களிடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதையும் படிங்க:சோனி கேமராவுடன் வரும் விவோ V40e: சினிமா தர வீடியோ, பெரிய பேட்டரி உடன் பல அம்சங்கள்!
மருத்துவ அவசரம், கல்விச் செலவுகள் அல்லது தனிப்பட்ட தேவை போன்ற குறுகிய கால நிதி தேவைகளைப் பூர்த்தி செய்ய தங்கக் கடன்கள் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. தங்கக் கடன் பெறும்போது சிறந்த கடன் வழங்குநரைத் தேர்ந்தெடுப்பது, கடன் பெறும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இங்கு காண்போம்:
1.வட்டி விகிதம்:
தங்கத்தின் மீதான கடனைக் கருத்தில் கொள்ளும்போது, வெவ்வேறு நிதி நிறுவனங்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது முக்கியம். சாதகமான வட்டி விகிதங்களை பெறுவது கடனுக்கான மொத்த செலவைக் கணிசமாகக் குறைக்கும். இது காலப்போக்கில் பெரிதும் பயனளிக்கும்.
2.கடன் மதிப்பு விகிதம் (எல்டிவி):