தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி - மத்திய அரசு அனுமதி - SUGAR EXPORT

2024-25-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 21, 2025, 2:06 PM IST

புதுடெல்லி: செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 2024-25-ம் கால கட்டத்தில் 1 மில்லியன் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்தது.

மத்திய உணவு அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார். "மத்திய அரசின் இந்த முடிவு 50 மில்லியன் விவசாய குடும்பங்கள் மற்றும் 500,000 தொழிலாளர்களுக்கு பயனளிக்கும் என்றும், இந்திய சர்க்கரைத் துறையை வலுப்படுத்தும்" என்றும் கூறினார். "இது சர்க்கரை ஆலைகளின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும், கரும்பு நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் செலுத்துவதை உறுதி செய்யும்" என்றும் பிரகலாத் ஜோஷி கூறினார்.

உணவு அமைச்சக உத்தரவு, ஒதுக்கப்பட்ட அளவுகளுக்குள் அனைத்து வகையான சர்க்கரைகளையும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. 2024-25 ஆம் ஆண்டில் உற்பத்தியைத் தொடங்கும் புதிய ஆலைகளும், மூடப்பட்ட பிறகு செயல்பாடுகளை மீண்டும் தொடங்கும் ஆலைகளும் ஏற்றுமதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

செப்டம்பர் 30 வரை ஆலைகள் நேரடியாகவோ அல்லது வணிக ஏற்றுமதியாளர்கள் மூலமாகவோ ஏற்றுமதி செய்யலாம். போக்குவரத்து செலவுகளைக் குறைக்க மார்ச் 31 ஆம் தேதிக்குள் கோட்டாக்களை ஒப்படைக்கவோ அல்லது உள்நாட்டு கோட்டாக்களுடன் அவற்றை மாற்றவோ அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டு, பரஸ்பர ஒப்பந்தங்கள் மூலம் உள்நாட்டு மாதாந்திர வெளியீட்டு அளவுகளுடன் ஏற்றுமதி கோட்டாக்களை மாற்றிக்கொள்ள இந்தக் கொள்கை சர்க்கரை ஆலைகளை அனுமதிக்கிறது. முன்கூட்டியே அங்கீகாரம் அளிக்கும் திட்டத்தின் கீழ் சர்க்கரை ஏற்றுமதி தற்போதுள்ள விதிகளின் கீழ் தொடரும்.

உள்ளூர் சர்க்கரை விலைகள் 18 மாதக் குறைந்த அளவை எட்டியதால், ஆலைகளின் லாப வரம்புகளை கட்டுப்படுத்துவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 27 மில்லியன் டன்களாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது உள்நாட்டு நுகர்வுத் தேவையான 29 மில்லியன் டன்களுக்குக் கீழே குறைகிறது.

கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் தேசிய கூட்டமைப்பின் கூற்றுப்படி, நாட்டின் சர்க்கரை உற்பத்தி ஜனவரி 15 ஆம் தேதிக்குள் 13.06 மில்லியன் டன்களை எட்டியுள்ளது, இது முக்கிய உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் குறைந்த மகசூல் காரணமாக குறைந்துள்ளது.

"சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவு சர்க்கரை ஆலைகளுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது, இதனால் அவை முக்கியமான வருவாயை ஈட்ட முடிகிறது, இது விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கரும்புக்கு பணம் செலுத்துவதற்கு உதவும் " என்று சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெனரல் தீபக் பல்லானி ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details