டெல்லி:சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதி அன்று வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் (LPG) விலையை எண்ணைய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் வருடத்தின் முதல் மாதமான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனம் குறைத்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை அதிகரித்து வந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, சென்னையில் இன்று (ஜனவரி 1) வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோகப் பயன்பாட்டு சிலிண்டரில் மாற்றம் இல்லாமல், ரூ.818.59ஆக விற்பனை செய்யப்படுகிறது.