ETV Bharat / business

அமெரிக்க நீதிமன்றம் ஊழல் குற்றசாட்டு.. டாலர் பத்திரங்களை கைவிடும் அதானி கிரீன் எனர்ஜி..!

நியூயார்க் நீதிமன்றம் ஊழல் குற்றசாட்டை சுமத்தியுள்ளதால் டாலர் மதிப்பிலான பத்திரங்களைத் தொடர வேண்டாம் என்று அதானி குழுமத்தின் துணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதானி குழுமம்
அதானி குழுமம் (credit - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 21, 2024, 12:07 PM IST

Updated : Nov 21, 2024, 3:30 PM IST

மும்பை: அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி சூரிய சக்தி விநியோக ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு, இந்திய அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதில், சூரிய சக்தி விநியோக ஒப்பந்தத்தில் அதிகப்படியான லாபத்தை ஈட்ட நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்களை இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்ததாகவும், முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை மறைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஒப்பந்தங்கள் சுமார் 20 ஆண்டுகளில் வரி அல்லாமல் 2 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், அதானியின் கூட்டாளிகளில் ஒருவர் லஞ்சம் கொடுப்பதை உன்னிப்பாகக் கண்காணித்து, அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பணப்பரிவர்த்தனைகளை தனது தொலைபேசியைப் பயன்படுத்தி பதிவு செய்ததாகவும் நியூயார்க் நீதிமன்றத்தின் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளியானது வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு.. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி?

அத்துடன், அந்த குற்றப்பத்திரிகையில், இந்திய அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியனுக்கும் அதிகமான லஞ்சம் கொடுத்து முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகளிடம் பொய் சொல்லி பில்லியன் டாலர்களை திரட்டியதாகவும், அதே சமயம் மற்ற பிரதிவாதிகள் அரசாங்கத்தின் விசாரணையைத் தடுப்பதன் மூலம் லஞ்ச சதியை மறைக்க முயன்றதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் டாலர் பத்திரங்களைத் தொடர வேண்டாம் என முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் வெளியிட்ட அறிக்கையில், '' அமெரிக்காவின் நீதித் துறை மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் செக்யூரிட்டீஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமிஷன் ஆகியவை முறையே கௌதம் அதானி மற்றும் சாகர் அதானி மீது கிரிமினல் குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக, ஏற்கனவே முன்மொழியப்பட்ட அமெரிக்க டாலர் மதிப்பிலான பத்திரங்களைத் தொடர வேண்டாம் என்று எங்கள் துணை நிறுவனங்கள் தற்போது முடிவு செய்துள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Nov 21, 2024, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.