அக்டோபர் மாதத்திற்குரிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கான நிதிப்பகிர்வாக ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.
ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களின் மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு ரூ. 1,78,173 கோடியை விடுவித்துள்ளது.
வழக்கமாக மாதாந்திர வரிப்பகிர்வு ரூ. 89,086.50 கோடியாக இருக்கும். ஆனால் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது. விடுவிக்கப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.