தமிழ்நாடு

tamil nadu

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 4:56 PM IST

ETV Bharat / bharat

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்:"காங்கிரஸ் அமைதி காப்பது ஏன்? எங்களோடு போராட வாருங்கள்"- ஜேபி நட்டா அழைப்பு! - JP Nadda

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரத்தில் திமுகவுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல் காங்கிரஸ் மவுனம் காப்பது அதிர்ச்சியை அளிப்பதாக மத்திய அமைச்சர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Kharge (left) - JP Nadda (Right) (ETV Bharat)

ஐதராபாத்:பாஜக தேசியத் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் எழுதியுள்ளார். அதில், பாஜக தேசியத் தலைவர் என்ற அடிப்படையில் கடிதம் எழுதாமல், அதை விட முக்கியமாக, நாட்டின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டின் காரணமாக தமிழகத்தில் நிலவும் கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து நாடளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன் கருப்பு பட்டை அணிந்து நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளாச்சாரயத்தால் உயிரிழந்த 55க்கும் மேற்பட்டவர்களின் சடலங்களை ஒரே இடத்தில் தகனம் செய்த புகைப்படங்கள் வெளியாகி நாட்டை உலுக்கி உள்ளதாகவும், தமிழ்நாடில் இதுவரை இல்லாத அளவாக மிக மோசமான கள்ளச்சாராய சம்பவத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது வேதனை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய பேரழிவு நடந்த போதும், ​​உங்கள் தலைமையிலான காங்கிரஸ் கட்சி இதைப் பற்றி மவுனம் காத்து வருவது தனக்கு அதிர்ச்சியாக இருந்ததாகவும் இந்த நேரத்தில், பாஜக மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் இந்தியா கூட்டணியில் உள்ள திமுகவுக்கு கடும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோருவதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரவும், அமைச்சர் முத்துச்சாமியை அப்பதவியில் இருந்து நீக்கவும் திமுகவுக்கு இந்தியாக் கூட்டணி கட்சிகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஜேபி நட்டா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஜூன் 24 பகல் 12 மணி நிலவரப்படி கள்ளச்சாராயாம் அருந்திய 58 பேர் உயிரிழந்ததாகவும் 156 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கள்ளச்சாராயத்தால் 44 பெண்கள் தங்களது கணவனை இழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குரிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110 பேர் கள்ளச்சாராய சம்பவத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் 12 பேரும், சேலம் மருத்துவமனையில் 20 பேரும், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் 4 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்ச ரூபாயை நிவாரணமாக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பெற்றோரை இழந்த 18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயும், அவர்கள் பெயரில் 5 லட்ச ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையும் வைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அவர்களது கல்விச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: கணவனை இழந்து தவிக்கும் 44 பெண்கள்.. ஈடிவி பாரத் கள ஆய்வு தகவல் - Kallakurichi Hooch Tragedy

ABOUT THE AUTHOR

...view details