தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய சார்ஸ் கோவிட்-2 வகை தொற்று இந்தியாவில் அதிகரிப்பு...உலகசுகாதார நிறுவனம் தகவல் - NEW SARS COV 2

உலக சுகாதர நிறுவனத்தின் தகவலின்படி அதிகபட்சமாக 2659 பேருக்கு புதிய சார்ஸ் கோவிட்-2 வகை தொற்று பரவி இருப்பதாக கூறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 6:41 PM IST

புதுடெல்லி:இந்தியா தவிர தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய மூன்று தென் கிழக்கு ஆசிய பிராந்திய பகுதியில் கடந்த 28 நாட்களில் அதிக அளவு புதிய சார்ஸ் கோவிட்-2 வகை தொற்று பரவியுள்ளது தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தகவலில், இந்தியாவில் அதிக பட்ச இறப்பு பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 2659 பேருக்கு நோய் தொற்று பரவியுள்ளது. இது முந்தைய 28 நாட்களை விடவும் 29 சதவிகிதம் அதிகமாகும். அதாவது 398 பேருக்கு புதிதாக தொற்றுப் பரவி உள்ளது. அதே போல தாய்லாந்தில் புதிதாக 2014 பேருக்கு புதிதாக இந்த தொற்று பரவியுள்ளது. முந்தைய 28 நாட்களுடன் ஒப்பிடும்போது இது 2.9 சதவிகிதம் அதிகமாகும்.

இதையும் படிங்க:யார் கள்ளக்கூட்டணி...? பொங்கிய எதிர்க்கட்சி தலைவர்... முதல்வருடன் காரசார விவாதம்...!

முந்தைய 28 நாட்களை விடவும் இப்போதைய 28 நாளில் இறப்பு விகிதம் 67 சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்று நாடுகளிலும் 7 பேர் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 4 பேர் இறந்துள்ளனர். டிசம்பர் மாதம் மட்டும் உத்தரபிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தின் சுகாதார நிபுணர் மற்றும் தலைவர் திட்ட ஆலோசகர் குழுவை சேர்ந்த பேராசிரியர் சுனீலா கார்க், "குளிர் காலத்தில் தீவிரமான ஃப்ளூ காய்ச்சல், கோவிட்-19 போன்ற ஃப்ளூ தொற்று ஆகியவை ஏற்படக் கூடும். எனினும் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோர் ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். எனவே இது குறித்து கவலைப்படத் தேவையில்லை," என்றார்.

கோவின் தரவின்படி 2,20,68,68, 255 பேர் கோவிட்-19 தடுப்பூசி போட்டுள்ளனர். 1,02,74,39,010 பேர் முதல் டோஸ் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து 95,19,90,658 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர். இது தவிர 22,74,38,587 பேர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி போட்டுள்ளனர். இந்தியாவில் 2021ஆம் ஆண்டு அதிகபட்சமாக 37 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இது படிப்படியாக குறைந்து 2023ஆம் ஆண்டு இறுதியில் 6 சதவிகிதமாக குறைந்தது எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details