டெல்லி:டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் உணவு வளாகத்தில் (Food Court) நேற்று (புதன்கிழமை) 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து, அவருடன் வந்திருந்த அவரது உறவினர்கள் உதவி கேட்டு சத்தமிட்டுள்ளனர்.
உறவினர்களின் சத்தத்தைக் கேட்டு விரைந்து வந்த அப்பகுதியில் இருந்த பெண் மருத்துவர் ஒருவர், தன்னிடம் இருந்த மருத்துவ உபரகணங்களைக் கொண்டு அவரது இதயத் துடிப்பை பரிசோதித்தார். பின்னர், முதியவரின் இக்கட்டான நிலையை அறிந்த மருத்துவர் அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.
சுமார் 5 நிமிடங்களுக்கு அவருக்கு சிபிஆர் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, முதியவர் மெது மெதுவாக மூச்சு விட ஆரம்பித்துள்ளார். அதன் பின்னர், அங்கிருந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பெண் மருத்துவரின் இந்த துரித செயல் முதியவர்களின் உறவினர்கள் உட்பட விமான நிலையத்தில் இருந்த பணிகள் மத்தியில் பாரட்டுகளை பெற்றார்.
இந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்ட முதியவரை பெண் மருத்துவர் ஒருவர் துரிதமாக காப்பாற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மருத்துவரின் துரித செயலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:உ.பியில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்து - 4 பேர் உயிரிழப்பு!