தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பியில் தொழிலதிபரின் மனைவியைக் கொன்ற ஜிம் கோச்.. திடுக்கிடும் பின்னணி!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொழிலதிபரின் மனைவியுடன் உறவில் இருந்த உடற்பயிற்சியாளர் கருத்து மோதல் காரணமாக கொலை செய்து அரசு ஆபீசர்ஸ் கிளப்பின் வளாகத்தில் புதைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 4 hours ago

கான்பூர் (உத்தரப்பிரதேசம்):கடந்த ஜூன் மாதம் உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபில தொழிலதிபரின் மனைவி காணாமல் போனதாக கோட்வாலி போலீசாருக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், இன்று போலீசார் சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண்ணின் உடற்பயிற்சியாளர் விமல் சோனியிடம் தீவிர விசரணை நடத்தினர். அந்த விசாரணையில், சோனி தொழிலதிபரின் மனைவியுடன் உறவில் இருந்தாகவும், அப்போது அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் உயிரிழந்த பெண் மன உளைச்சலானதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தொழிலதிபரின் மனைவி உடற்பயிற்சியாளர் சோனியைச் சந்தித்துப் பேசுவதற்காக, அன்று உடற்பயிற்சி கூடத்திற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் காரில் அமர்ந்து பேசியுள்ளனர். இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அப்போது, சோனி ஆத்திரத்தில் தொழிலதிபரின் மனைவியின் கழுத்தில் குத்தியுள்ளார். அதில் மயக்கமடைந்த அவர் உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க:19 வயது கர்ப்பிணியை நண்பர்களுடன் சேர்ந்து கொன்ற காதலன்.. விசாரணையில் பகீர் தகவல்!

இதையடுத்து சோனி உயிரிழந்த தொழிலதிபரின் மனைவியை உத்தரப்பிரதேச மாநிலத்தின் விஐபி சாலை டிஎம் வளாகத்தில் அமைந்துள்ள ஆபீசர்ஸ் கிளப்பின் வளாகத்தில் புதைத்துள்ளார். இதையடுத்து, இன்று உயிரிழந்த பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

இது குறித்து பேசிய உ.பி (கிழக்கு) துணை காவல் கண்காணிப்பாளர் ஷ்ரவன் குமார் சிங், “உயிர்ழந்த பெண் வழக்கமாக இந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர். இந்நிலையில், இருவருக்கும் ஏதோ ஒரு பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அப்போது உடற்பயிற்சியாளர் அந்தப் பெண்ணை கொலை செய்துள்ளார். விசாரணையில், சோனி பல்வேறு விதமாக இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி செய்தார். பின் அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில்தான், அவர் அவரது குற்றத்தை ஒப்புக் கொண்டு செய்ததை கூறினார்” என்றார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details