தானே: மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும், ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் மாநில முதல்வர் ஹேம்ந்த சோரனும் வெற்றி பெற்றுள்ளனர்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே மொத்தம் 1,59, 060 வாக்குகளை பெற்றதுடன், 120717 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) வேட்பாளரான கெடார் பிரகாஷ் டிஹேவுக்கு 38,343 வாக்குகளே பெற முடிந்தது. இந்த அபார வெற்றியின் மூலம் கோப்ரி-பச்சபகாடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாகிறார் ஏக்நாத் ஷிண்டே.
இதேபோன்று , ஜார்க்கண்ட மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்மாநிலத்தின் முதல்வரான ஹேமந்த் சோரன், பார்ஹெய்த் தொகுதியில போட்டியிட்டார். அவர் மொத்தம் 95612 வாக்குகளை பெற்றதுடன், பாஜக வேட்பாளரான கேம்ரியல் ஹெம்ரோமை 39791 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டுள்ளார்.
இவரை போன்றே, மகாராஷ்டிர மாநில துணை முதல்வரான தேவேந்திர ஃபட்னவீஸ் நாக்பூர் (வடமேற்கு) தொகுதியில் போட்டியிட்டார். அவர் 129401 வாக்குகளை பெற்றதுடன், தம்மை எதிர்த்து போட்டியிட்ட பிரஃபுல்லா வினோத்ராவ் குடாடேவை 39,710 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து, தமது தலைமையில் போட்டி சிவசேனாவை உருவாக்கி, பாஜகவுடன் கைகோர்த்தவர் ஏக்நாத் ஷிண்டே. அத்துடன், பாஜக ஆதரவுடனான கூட்டணி ஆட்சியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா மாநில முதல்வராகவும் ஷிண்டே பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.