ஹைதராபாத்:வன உரிமைக்காக, நிலத்துக்காக, குடிநீருக்காக என அடிப்படை உரிமைகளுக்காக போராடும் பழங்குடியின மக்கள் ஆதிக்கம் கொண்ட கனிம வளம் மிக்க மாநிலம் ஜார்கண்ட். இங்கு அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களின் வாக்குகளை ஈர்ப்பதற்காக ரொட்டி, மகள்கள் மற்றும் தாய்நாடு என்ற கோஷத்தை பாஜக முன் வைத்தது. ஆனால், இது ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைமையிலான இந்தியா கூட்டணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை.
பிரதமர் மோடி முன்னெடுத்த கோஷம்: ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது ரொட்டி, மகள்கள் மற்றும் தாய்நாடு என்ற கோஷத்தை பிரதமர் நரேந்திர மோடி எழுப்பினார். பழங்குடியின பெண் வாக்காளர்களை கவர்வதற்காக முன் வைக்கப்பட்ட கோஷமாக இது பார்க்கப்பட்டது. எனினும், ஜார்கண்ட் முக்தி மோர்சா கட்சியானது, நீர், வனம் மற்றும் நிலம் என்ற நீண்டகால கோஷத்தையே இந்த தேர்தலிலும் முன் வைத்தது.
தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி முன் வைத்த முழக்கம் ஆதிவாசி பெண் வாக்காளர்களை ஈர்க்கும் நடவடிக்கையாகத் தோன்றியது. பெண்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்த மாதந்தோறும் ரூ.1,000 நிதி உதவி வழங்கும் ஜார்கண்ட் முக்தி மோர்சாவின் மையா சம்மன் யோஜனாவிற்கு மாற்றாகவே அந்த கோஷம் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: தென் மாவட்ட மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. என்ன தெரியுமா?
வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களால் பழங்குடியினரின் நில உரிமைகள் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே பாஜக ஆட்சிக்கு வந்த பழங்குடியினருக்கான நில உரிமை பாதுகாக்கப்படும் என்றும் பாஜக பரப்புரையை முன்னெடுத்தது. சட்டவிரோதமாக குடியேறும் வங்கதேசவருக்கும், பழங்குடியின பெண்களுக்கும் நடக்கும் திருமணங்கள் குறித்து பாஜக தேர்தல் பரப்புரை மேற்கொண்டது.
ஜேஎம்எம் கொடுத்த தேர்தல் வாக்குறுதி: பாஜகவின் இந்த பிரச்சார உத்தி பழங்குடியின மக்களிடம் அவ்வளவாக எடுபடவில்லை. இன்னொருபுறம், முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வாக்காளர்களின் பல்வேறு தரப்பினரிடம் முக்கியமான வாக்குறுதிகளை முன் வைத்தது. மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு, மழலையர் பள்ளி முதல் முனைவர் பட்டம் பெறுவது வரை இலவச கல்வி, கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் உள்ளிட்ட வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் ஜேஎம்எம் கூறியது.
பாஜகவின் பிரிந்தால் அழிந்து விடுவோம் என்ற கோஷமும் ஜார்கண்ட் பரப்புரையில் முதன்மையாக இடம் பெற்றது. உபி முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்தின் இந்த விமர்சனம் குறித்து ஜேஎம்எம் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சர்ச்சையை கிளப்பியது. பரப்புரையின் போது யோகியின் கோஷம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சனம் செய்தார். இது போன்ற முழக்கங்கள் சமூகத்தில் வெவ்வேறு பிரிவினரிடையே அச்சத்தையே விளைவிக்கும் என்றார். பிரிந்தால் அழிந்து விடுவோம் என்ற கோஷத்துக்கு மாறாக பயமே மரணத்தை கொண்டு வரும் என்று அவர் கூறினார்.
ஒற்றுமையாக இருந்தால் நாம் பாதுகாப்பாக இருப்போம் என்பது போன்ற கோஷங்கள் ஜார்கண்ட் மக்களை பெரும் அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் அங்கு எப்போதுமே நிலம், நீர் மற்றும் வன உரிமைகள் தொடர்பான பழங்குடியினரின் பிரச்சனைகள் உணர்ச்சிப்பூர்வமாக முதன்மையான இடத்தை பிடித்துள்ளன.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்