பெங்களூரு:பெங்களூரு நகரில் கனமழை பெய்து வரும் நிலையில் பாபுசாபாலி பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ள பத்து பேரை மீட்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
பெங்களூரு நகரில் இன்று கனமழை பெய்து வருகிறது. இதனால் யெலகங்கா, மல்லேஸ்வர், சில்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதற்கிடையே நகரின் ஹென்னூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பாபுசாபாலி என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்த கட்டடப்பணியில் ஈடுபட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி தவிக்கின்றனர்.
ஒருவர் பலி:கட்டடம் இடிந்து விழுந்த தகவலை அடுத்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் அந்தப் பகுதிக்கு விரைந்தனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே இடிபாடுகளில் இருந்து ஒருவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. இருவர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்