பெத்தப்பள்ளி :தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் மனையர் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு வருகிறது. மன்தனி - பரகல், பூபால்பள்ளி - ஜம்மிகுன்டா டவுன்களை இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டு வந்தது. ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தை ஒரே பாதையில் இணைக்கும் விதமாக இந்த பாலம் கட்டப்பட்டு வந்து உள்ளது.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான காற்று வீசி வரும் நிலையில் நேற்று (ஏப்.22) இரவு முதாரம் மண்டல் ஓடேடு கிராம அருகே கடுமையான காற்றின் காரணமாக பாலத்தின் இரண்டு தூண்கள் சரிந்து விழுந்தன. பாலத்தின் ஒரு பாகம் சரிந்து விபத்துக்குள்ளான நேரத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.