ETV Bharat / bharat

Manmohan Singh: பொருளாதார மேதை மறைவு.. "இந்தியாவிற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு" - அரசியல் தலைவர்கள் உருக்கம்! - MANMOHAN SINGH

நவின இந்தியாவின் பொருளாதார மேதை என்று அழைக்கப்படும், முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் நேற்று இரவு காலமானார்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் (Credits - @rajbhavan_tn)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 27, 2024, 8:03 AM IST

ஐதராபாத்: முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று இரவு மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். தற்போது, அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) நேற்று இரவு காலமானார். அவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் சுயநினைவை இழந்த நிலையில் நேற்று (டிச.26) இரவு 08:06 மணிக்கு, புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு அவசரப் பிரிவில், தீவிர சிகிச்சை அளித்ததாகவும், எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை எனவும், பின்னர் இரவு 09:51 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாக்டர் மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் அவரது மறைவுக்குக் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு: இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல், வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்குகள் நாளை (டிச.28) நடைபெறும் எனவும், 7 நாட்கள் பொதுநிகழ்ச்சிகள அனைத்து ரத்து செய்யப்படுவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

மேலும், அவரது மறைவுக்காக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், இன்று நடைபெறவிருந்த அனைத்து அரசு அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு:

"முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கல்வி மற்றும் நிர்வாகம் இரண்டையும் சமமாக எளிதாக்கிய அரிய அரசியல் தலைவர்களுள் ஒருவர். இந்தியப் பொருளாதாரத்தை சீர்திருத்துவதில் முக்கிய பங்காற்றியவர். அவரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. தேசத்துக்காக அவர் ஆற்றிய சேவை, அவரது களங்கமற்ற அரசியல் வாழ்வு, பணிவு ஆகியவற்றுக்காக அவர் என்றும் நினைவு கூறப்படுவார். பாரதத்தின் மிகச்சிறந்த புதல்வனுக்கு, எனது மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்:

"பத்ம விபூஷண் விருது பெற்றவர். 1991-ல் இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் கட்டடக் கலைஞர், தைரியமாக நம் தேசத்தை வழிநடத்தினார். வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான புதிய பாதைகளை உருவாக்கியவர். இந்தியாவின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றியமைத்த முன்னாள் பிரதமரும், புகழ்பெற்ற பொருளாதார நிபுணருமான டாக்டர் மன்மோகன் சிங்-யின் மறைவு செய்தி என்னை வேதனை அடைய வைத்ததது.

இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் என்ற முறையில், அவரது இல்லத்தில் நுண்ணறிவுத் தொடர்புகளில் ஈடுபடும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. பொருளாதாரம் குறித்த அவரது ஆழ்ந்த புரிதல், மென்மையான நடத்தை மற்றும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை என்றும் நிலைத்திருக்கும்.

சோனியா காந்தி:

"இந்த செய்தி மிகவும் துயரமானது. நமது காங்கிரஸ் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு" எனப் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி:

"மன்மோகன் சிங் ஜி இந்தியாவை மகத்தான ஞானத்துடனும், நேர்மையுடனும் வழி நடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. நான் ஒரு சிறந்த வழிகாட்டியை இழந்துவிட்டேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி:

"முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். ஞானம், பணிவு மற்றும் நேர்மையின் உருவகமாக விளங்கிய அவர், இந்திய பொருளாதாரத்துக்கும் சவாலான காலங்களில் தேசத்தை வழிநடத்துவதற்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார். மக்கள் பணிக்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

அதிமுக எடப்பாடி பழனிசாமி:

"மன்மோகன் சிங் மறைவு செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவரது எல்பிஜி (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) மாதிரியின் வளர்ச்சியானது நாட்டிற்கு ஒரு புதிய பாதையை உருவாக்கியது. அவர் சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" எனத் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்:

"இந்தியாவை மகத்தான ஞானத்துடனும், நேர்மையுடனும் வழிநடத்தியவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற உன்னத சேவைகளுக்கான அவரது ஈடுயிணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.

பாஜக அண்ணாமலை:

"பொருளாதாரத்தில் வலுவான புத்திசாலித்தனம் கொண்ட தலைவர், நிதியமைச்சராக இருந்த அவரது பதவிக்காலம் தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்தியது. அவருடைய வார்த்தைகளை விட, அவரது ஆழ்ந்த செயல்கள் அதிகம் பேசியது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற முக்கிய சட்டங்கள், மக்கள் நலனுக்கான அவரது அர்ப்பணிப்புக்கு சான்று. இந்தியாவின் வளர்ச்சிக்கான அவரது பங்களிப்பு தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்ய மற்றவர்களை ஊக்குவிக்கும்" என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.