உத்தரகாண்ட்/கர்நாடகா: உத்தரகாண்ட் மாநிலம், ஷாஜகான்பூர் மாவட்டத்தில் சாலையோர உணவகம் முன் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது, சல்லிக் கற்களை ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் காயமடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து ஷாஜகான்பூர் எஸ்.பி அசோக் குமார் மீனா கூறுகையில், “பூர்ணகிரி செல்லும் பக்தர்கள் இந்த பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள கம்லாபூர் காவல்நிலைய பகுதியைச் சேர்ந்தவர்கள். இரவு 11 மணியளவில் குதார் பிஎஸ் பகுதியில் பேருந்தை நிறுத்தி, சில பக்தர்கள் தாபாவில் உணவருந்தி கொண்டிருந்தனர். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.