கன்கெர் :முதல் கட்ட மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் கன்கெரில் பாதுகாப்பு படையினர் நடத்திய பயங்கரவாத வேட்டையில் 18 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளில் சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய முக்கிய வேட்டைகளில் இதுவும் ஒன்று எனக் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தாக்குதலில் 3 வீரர்கள் படுகாயம் அடைந்த நிலையில், நவீன துப்பாக்கிகல், ஆயுதங்கள் உள்ளிட்ட பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் பஸ்டர், கன்கெர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர்களில் 79 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பிஜாபூர் மாவட்டத்தில் பாதுகாப்பு வீரர்கள் நடத்திய என்கவுன்டரில் 13 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது போன்ற கடந்த 10 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டர்களில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏப்ரல் 02, 2024: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்ட லெந்தரா வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பாதுகாப்பு படையினர் நடத்திய கூட்டு சோதனை முயற்சியில் 13 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மார்ச் 27, 2024:சத்தீஸ்கர், பஸ்டர் மற்றும் பிஜாபூர் பகுதியில் நக்சல் நடமாட்டம் குறித்து தகவல் அறிந்து சோதனையில் ஈடுபட்ட பாதுகாப்பு படை வீரர்கள் இரண்டு பெண் நக்சலைட்டுகள் உள்பட 6 மாவோயிஸ்ட்களை என்கவுன்டர் செய்தனர்.
பிப்ரவரி 27, 2024:சத்தீஸ்கர் பிஜாபூர் மாவட்ட வனப்பகுதியில் ஐஇடி வெடிகுண்டுகளை மண்ணில் புதைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த துப்பாக்கி ஏந்திய 4 நக்சலைட்டுகளை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
பிப்ரவரி 2 2024: நாராயன்பூர், பஸ்டர் அடுத்த கோமகள் கிராம அருகே உள்ள வனப்பகுதியில் சத்தீஸ்கர் போலீசாருக்கும் - நக்சலைட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
டிசம்பர் 12, 2023: தன்டேவடா மாவட்டம் துமக்பல் மற்றும் தப்பா குன்னா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
அக்டோபர் 21, 2023:சத்தீஸ்கர் கன்கெர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கொயில்பெடா பகுதியில் மாவட்ட வன பாதுகாவலர்கள் நடத்திய கூட்டு ஆபரேஷனில் நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.