தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளம் பெயர் மாற்றம்: சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்! - Keralam Name Change

கேரளம் என மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி அம்மாநில சட்டப்பேரவையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Etv Bharat
File photo of Kerala Chief Minister Pinarayi Vijayan (ANI Photo)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 9:37 AM IST

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசை வலியுறுத்தி அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அரசத் தரப்பில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து சட்டப்பேரவையில் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இதனிடையே மசோதாவில் சில திருத்தங்களை கொண்டு வருமாறு எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்த நிலையில், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. கடந்த ஆண்டும் இதேபோன்று மாநிலத்தை பெயரை மாற்றக் கோரி கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20223ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி கேரள சட்டப் பேரவையில் மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றக் கோரி தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அரசியலமைப்பின் முதல் மற்றும் எட்டாவது பட்டயலின் கீழ் மாநிலத்தின் பெயரை மாற்ற மாநில அரச, மத்திய அரசை வலியுறுத்தி இருந்தது.

இருப்பினும், இந்த மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது. இந்நிலையில், திருத்தப்பட்ட தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிர்வாக கட்டமைப்பின் முதல் பட்டியலில் கேரளா என்ற பெயர் மட்டுமே உள்ளதாகவும், அதை அரசியல் சட்டத்தின் எட்டாவது பட்டியலில் மாற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும் முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:தன்பாலின வன்கொடுமை வழக்கு: சுரஜ் ரேவண்ணாவுக்கு 14 நாட்கள் சிஐடி காவல் - நீதிமன்றம்! - Suraj Revanna

ABOUT THE AUTHOR

...view details