ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இந்திய ராணுவத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் போலீசாருடன் இணைந்து இந்திய ராணுவ வீரர்கள் கவுத், குப்வாரா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த வீரர்கள் மீது பயங்கரவாதி முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதுகாப்பு வீரருக்கு படுகாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.