தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு சரமாரி கேள்வி.. காரசாரமான முழு வாதம்! - Ponmudi Minister Inauguration Issue - PONMUDI MINISTER INAUGURATION ISSUE

Ponmudi Minister Inauguration Issue: பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளைக்குள் (மார்ச் 22) முடிவெடுத்து தெரிவிக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Ponmudi Minister Inauguration Issue
Ponmudi Minister Inauguration Issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 21, 2024, 8:49 PM IST

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றதால், முன்னாள் அமைச்சர் பொன்முடி பதவி இழந்தார். இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கின் மேல்முறையீட்டில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் அவர் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்வார் என சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது. அதேநேரம், பொன்முடி அமைச்சராகப் பதவியேற்பு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்ச் 13ஆம் தேதி அன்று கடிதம் ஒன்றை அனுப்பினார்.

ஆனால், பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்து, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவில், "பொன்முடியை அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்ட கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்துள்ளார். சட்டப்படி அதனை நிராகரிப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. எனவே, பொன்முடியை அமைச்சராக நியமிக்க ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று (மார்ச் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது, "பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்க நாளை (மார்ச் 22) வரை அவகாசம் வழங்குகிறோம். பொன்முடி விவகாரத்தில் நாளைக்குள் ஆளுநர் தனது முடிவைத் தெரிவிக்காவிட்டால், என்ன நடவடிக்கை எடுப்போம் என இப்போது தெரிவிக்கப் போவது இல்லை.

மேலும், பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த பின்னர், எதன் அடிப்படையில் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க மறுப்பு தெரிவிக்கிறார் ஆளுநர்? பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி நாளைக்குள் முடிவெடுத்து தெரிவிக்காவிட்டால், உச்ச நீதிமன்றம் உரிய அரசியல் சாசன அடிப்படையிலான உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும்" என்று உத்தரவிட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, "பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூறினால், அதை எப்படி அரசியல் சாசனத்துக்கு எதிரானது என ஆளுநர் கூற முடியும்? பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என சொல்லும் அதிகாரத்தை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு யார் கொடுத்தது? ஆளுநர் அரசியல் சாசனத்தைப் பின்பற்றவில்லை எனில், மாநில அரசு என்ன செய்ய இயலும்?" என்று ஆளுநருக்கு எதிராக அடுக்கடுக்கான சரமாரி கேள்விகளை எழுப்பியது, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

இதுமட்டுமல்லாது, நாங்கள் ஒன்றும் இங்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்கவில்லை. ஆளுநரின் செயல்பாடுகள் அரசியல் சாசனத்தை மீறியதாக இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி, உச்ச நீதிமன்றத்துடன் விளையாட வேண்டாம். இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவெடுக்காமல் நீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டால், ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்" என்று காட்டமாக எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், இந்த விசாரணையின் இடையே, மத்திய அரசு சார்பாக ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை நாங்கள் நியாயப்படுத்தவில்லை, அவரது நடத்தை குறித்து வருத்தமடைகிறோம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவை ஈஷா யோகா மையத்தில் 8 ஆண்டுகளில் 6 பேர் மாயம்; உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்! - Isha Yoga Center

ABOUT THE AUTHOR

...view details