மும்பை: நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா(வயது 86), உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது.
தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! - RATAN TATA HEALTH CONDITION
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா(Ratan tata) உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நிலை கவலைக்கிடம்.. மும்பை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை! ரத்தன் டாடா(கோப்புப்படம்)](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-10-2024/1200-675-22646000-thumbnail-16x9-tata.jpg)
Published : Oct 9, 2024, 9:00 PM IST
ஆனால், அதனை மறுத்த ரத்தன் டாடா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "எனது உடல்நிலை குறித்து தற்போது பரவி வரும் வதந்திகள் எனது கவனத்திற்கு வந்தது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை, கடந்த திங்கட்கிழமை தனது வயது மற்றும் அது தொடர்பான மருத்துவ காரணங்களுக்காக வழக்கமான மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டேன்" எனப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ரத்தன் டாடா, இன்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.