டெல்லி:18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும், [பாஜக தலைமையிலான தேசிய ஜன்நாயக கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. அதேநேரம் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டணி 242 இடங்களை கைப்பற்றியது.
எனவே, ஆதரவு எம்பிக்களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் உரிமை கோரினார். குடியரசுத் தலைவரும் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், நாளை (ஜூன்.9) மாலை நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் இன்று (ஜூன்.8) மாலை காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்வது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள், மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.