இடுக்கியில் சுற்றுலா வாகனம் 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து; குழந்தை உள்பட 4 பேர் உயிரிழப்பு! - kerala tourists van accident
Idukki accident: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்து பயங்கர விபத்து
கேரளா: கேரளா மாநிலத்திலுள்ள இடுக்கி மாவட்டத்தின் மாங்குளம் என்ற பகுதியில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று மாலை (மார்ச் 19) மாங்குளம் அனக்குளம் சாலையில் சென்ற சுற்றுலாப் பயணிகள் வாகனம், ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததில், சாலை ஓரத்தில் 30 அடி பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 11 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அடிமலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 2 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கிடைத்த தகவலின் படி விபத்தில் உயிரிழந்தவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அடிமலி போலீசார் நடத்திய விசாரணையில், 14 பேர் அந்த வாகனத்தில் இருந்ததாகவும், அதில் விபத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.