தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தர பிரதேசத்தில் வெயில் கொடுமை: 7 பேர் பலி! தலைமை காவலர் சுருண்டு விழுந்த பரிதாபம்! - UP Heat Wave

உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடும் வெப்பம் காரணமாக 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்டி வதைக்கும் வெயிலின் கொடுமை தாங்காமல் காவலர் ஒருவர் சுருண்டு விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Seven Dead Due to Heatwave in UP (ETV Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 19, 2024, 6:02 PM IST

பிரோசாபாத்:உத்தர பிரதேச மாநிலத்தில் வரலாறு காணாத வகையில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. பிரோசாபாத் மாவட்டத்தில் கடும் வெப்ப அலை காரணமாக 7 பேர் வரை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வெயிலால் ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான்கு பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், சிறப்பு ரயிலில் பயணித்துக் கொண்டு இருந்த பயணி ஒருவரும் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ரயில் பயணிகளின் போது வெயிலின் உஷ்ணம் அதிகமானதாக மூதாட்டி உள்பட இரண்டு பேர் இறந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

கான்பூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த தலைமை காவலர் ஒருவர் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார். அருகில் இருந்த சக காவலர்கள் மற்றும் பொது மக்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவலர் ஒருவர் வெயிலின் தாக்கம் காரணமாக சுருண்டு விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ கான்பூர் மாவட்டம் மத்திய நிலையம் பகுதியில் படமாக்கப்பட்டதாகவும், வெயிலின் தாக்கம் காரணமாக சுருண்டு விழுந்த தலைமை காவலர் பிரஜ்கிஷோர் (வயது 52), ஜான்சி மாவட்டத்தின் கட்கயான் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தனது 5 வயது பேத்தியின் பிறந்த நாளை கொண்டாட மூன்று நாட்கள் விடுமுறையில் உள்ள அவர், சொந்த ஊர் செல்ல நிலையம் வந்த போது வெயிலின் தாக்கம் காரணமாக சுருண்டு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலம் நிறைவடைய உள்ள போதிலும், உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பத்துக்கு மத்தியில், உத்தர பிரதேசம் மாநிலத்திலும் 45 முதல் 47 டிகிரி செல்சியஸ் வரை கொளுத்தும் வெயிலை மக்கள் அனுபவித்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ள அரசு போதிய மருத்துவ உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஹெர்ஷே சாக்லேட் சிரப்பில் செத்த எலி! வீடியோ வைரல்! என்ன நடந்தது? - Hersheys chocolate syrup dead rat

ABOUT THE AUTHOR

...view details