தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"மதுரை - தூத்துக்குடி திட்டத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை.."- ரயில்வே அமைச்சகம் 'திடீர்' விளக்கம்! - MADURAI THOOTHUKUDI RAILWAY LINE

மதுரை - தூத்துக்குடி இடையே ரயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டத்தில் தமிழ்நாடு அரசுடன் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக எந்தப் பிரச்னையும் இல்லை என ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2025, 1:13 PM IST

டெல்லி: மதுரை - தூத்துக்குடி இடையே ரயில்வே வழிதடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால், கைவிடப்பட்டதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று அந்த தகவலை தவறுதலாக கூறியாதாக ரயில்வே அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ம் தேதி, சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையில் (ஐ.சி.எஃப்) ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இத்திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழ்நாடு அரசிடம் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது" எனக் கூறினார்.

இந்நிலையில், தற்போது மதுரை-தூத்துக்குடி திட்டத்தில் தமிழ்நாடு அரசிடமிருந்து நிலம் தொடர்பான எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ரயில்வே அமைச்சர் தெளிவுபடுத்தி இருகிறார். மேலும் ரயில்வே அமைச்சர் ஏன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வாறு கூறினார் என்பது குறித்து விளக்கமளித்து அறிக்கை ஒன்றையும் ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இதையும் படிங்க:டெல்லி மதுபான கொள்கை வழக்கு: கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு புதிய நெருக்கடி!

கடந்த ஜனவரி 10 அன்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் பாதை திட்டங்களை பற்றி தனித்தனியாக கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டனர். இதனால் அதிக சத்தமும் குழப்பமும் நிலவியது. அப்போது ஒரு செய்தியாளர் மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டம் பற்றி கேட்டார். ஒரே நேரத்தில் பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் தூத்துக்குடி என்பது அமைச்சர் காதில் தனுஷ்கோடி என்று பதிவானது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நில ஆர்ஜிதம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை காரணமாக ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை திட்டத்தை கைவிட கோரி கோரிக்கை வந்துள்ளதாக தெரிவித்தார். ஒரே நேரத்தில் தனித்தனி திட்டங்கள் பற்றி பல்வேறு குரல்கள் சத்தமாக கேட்டதால் அமைச்சருடைய பதில் தூத்துக்குடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு என தவறான தகவல் பரிமாற்றம் ஆகிவிட்டது. மதுரை - தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்திற்கு எந்த விதமான நில ஆர்ஜிதப் பிரச்சனையும் இல்லை.

இவ்வாறு ரயில்வே அமைச்சகம் சார்பில் வெளியிட்டப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details