தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாக்கெட் சாராய பிரியர்களுக்கு ஷாக்.. புதுவை அரசு விதித்த தடை! - PUDUCHERRY POCKET LIQUOR BAN

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள மதுபானக் கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து சாராயம் விற்பனை செய்ய மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகளில் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் சாராயம்
மதுபான கடைகளில் பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் சாராயம் (Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 6:02 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள சாராயக் கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்யக் கலால் துறை தடை விதித்துள்ளது.

புதுச்சேரி, காரைக்காலில் உள்ள சாராயக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதுச்சேரி கலால் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதையேற்று கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் படி பாக்கெட்டில் சாராயம் விற்பனை செய்ய கலால் துறை அனுமதி வழங்கியது.

இதனிடையே, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்குப் புதுச்சேரி சுற்றுச்சூழல் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது என்று கடிதம் கலால் துறைக்கு அனுப்பப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை சாராயம் விற்கப் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இதையும் படிங்க:'இப்போ 22 வயசு.. இனிமேலும் தள்ளி போட முடியாது'.. ஐதராபாத் வீணா-வாணி பெற்றோர் வேதனை..!

இந்தநிலையில் சுற்றுச்சூழல் துறையின் உத்தரவின்படி புதுச்சேரி, காரைக்காலில் உள்ள மதுபானக் கடைகளில் பாக்கெட்டில் சாராயம் அடைத்து விற்பனை செய்யத் தடை விதித்து கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் எனவும் சாராயக்கடைகளுக்கு கலால் துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit - ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details