டெல்லி: நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடியை தொடர்ந்து 71 பேர் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்பு பிரமாணம் செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து இன்று மாலை டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
கேபினட் அமைச்சர்கள் | ||
வரிசை எண் | அமைச்சர்கள் பெயர் | இலாகா விபரம் |
1 | நரேந்திர மோடி | பிரதமர் |
2 | ராஜ்நாத் சிங் | பாதுகாப்புத் துறை |
3 | அமித் ஷா | உள்துறை |
4 | நிதின் கட்கரி | சாலை மற்றும் போக்குவரத்து துறை |
5 | நிர்மலா சீதாராமன் | நிதித்துறை |
6 | அஸ்வினி வைஷ்ணவ் | ரயில்வே துறை |
7 | எஸ்.ஜெய்சங்கர் | வெளியுறவு துறை |
8 | சிவராஜ் சிங் சவுகான் | விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை |
9 | ஜே.பி.நட்டா | மருத்துவத்துறை |
10 | மனோகர் லால் | வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மின்சாரத்துறை |
11 | ஹெச்.டி.குமாரசாமி | எஃகு துறை |
12 | பியூஷ் கோயல் | தொழில்துறை |
13 | தர்மேந்திர பிரதான் | கல்வித்துறை |
14 | ஜித்தன் ராம் மாஞ்சி | சிறு, குறு, நடுத்தர தொழில்துறை |
15 | ராஜீவ் ரஞ்சன் சிங் | கால்நடைத்துறை |
16 | சர்பானந்தா சோனோவால் | துறைமுகம், கப்பல் போக்குவரத்து துறை |
17 | வீரேந்திர குமார் | சமூக நலத்துறை |
18 | ராம்மோகன் நாயுடு | விமான போக்குவரத்து துறை |
19 | ஜூவல் ஓரம் | பழங்குடியினர் நலத்துறை |
20 | பிரகலாத் ஜோஷி | உணவுத்துறை |
21 | ஜோதிராதித்ய சிந்தியா | தொலைத்தொடர்புத் துறை |
22 | கஜேந்திர சிங் ஷெகாவத் | சுற்றுலாத்துறை |
23 | பூபேந்தர் யாதவ் | சுற்றுச்சூழல், வனத்துறை |
24 | கிரிராஜ் சிங் | ஜவுளித்துறை |
25 | அன்னபூர்ணா தேவி | பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை |
26 | கிரண் ரிஜிஜு | சிறுபான்மையினர் நலத்துறை |
27 | ஹர்தீப் சிங் பூரி | பெட்ரோலியத்துறை |
28 | மன்சுக் மாண்டவியா | விளையாட்டுத்துறை |
29 | கிஷன் ரெட்டி | சுரங்கத்துறை |
30 | சிராக் பாஸ்வான் | உணவு பதப்படுத்தும் தொழில் துறை |
31 | சி ஆர் பாட்டீல் | ஜல் சக்தி துறை |
MINISTERS OF STATE (INDEPENDENT CHARGE):
வரிசை எண் | அமைச்சர்கள் பெயர் | இலாகா விபரம் |
1 | ராவ் இந்தர்ஜித் சிங் | மாநில திட்டமிடல், கலாச்சாரம் |
2 | ஜிதேந்திர சிங் | மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை |
3 | அர்ஜுன் ராம் மேக்வால் | மாநில நீதித்துறை |
4 | ஜாதவ் பிரதாப்ராவ் கணபத்ராவ் | மாநில மருத்துவத்துறை |
5 | ஜெயந்த் சவுத்ரி | மாநில கல்வித்துறை |