புதுடெல்லி:இந்திய சுதந்திர போராட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற தலைவரான மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு புதன் கிழமையன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும் லால்பகதூர் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தமது எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "உண்மை, நல்லிணக்கம், சம உரிமை ஆகிய லட்சியங்களின் அடிப்படையில் அமைந்த மரியாதைக்குரிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை, லட்சியங்கள் எப்போதுமே நாடின் மக்களால் ஈர்க்கக் கூடியவை. தேசந்தின் தந்தையாக உருவெடுத்த காந்தி, உண்மை, அகிம்சை ஆகிய கொள்கைளின் அடிப்படையில் என்னென்றும் பின்பற்றக்கூடியவர், உலகம் முழுவதும் உள்ள தன்னார்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளை பல தலைமுறைகளாக ஈர்த்து வருபவர்," என்று கூறியுள்ளார்.
இதுதவிர நாட்டின் இரண்டாவது பிரதமராக பதவி வகித்த லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, "நாட்டின் வீர்கள், விவசாயிகள் ஆகியோரின் பெருமைக்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவர் லால்பகதூர் சாஸ்திரி. ஜெய் ஜவான், ஜெய் கிஷான் என்ற கோஷத்தை எழுப்பியவர். அவரது எளிமை மற்றும் நேர்மை பரந்த அளவில் மரியாதையுடன் நினைவு கூரப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.