ETV Bharat / state

சென்னை வெள்ளத்துக்கு 6 ஆயிரம், வட தமிழகத்துக்கு மட்டும் 2 ஆயிரமா..? - அன்புமணி கேள்வி - ANBUMANI SLAMS DMK

அம்பேத்கரை வைத்து திமுக அரசியல் செய்கிறது என்றும் வட தமிழர்கள் மீது முதல்வருக்கு அக்கறையில்லை எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் பேட்டி
அன்புமணி ராமதாஸ் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2024, 6:22 PM IST

Updated : Dec 24, 2024, 4:24 PM IST

சென்னை: டெல்லியில் இருந்து விமான மூலம் சென்னை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''திருவண்ணாமலையில் ராமதாஸ் தொடங்கிய தமிழ் நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு நடக்க உள்ளது. விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் கண்டறிந்து அதற்கு தீர்வு காணப்படும். எந்த அரசியல் கட்சியும் உழவர்களுக்கு என்று தனியாக மாநாடு நடத்தியதில்லை. உழவர்கள் உயர வேண்டும். தற்கொலைகள் நடக்க கூடாது, விளைச்சலுக்கு விலை கிடைக்க வேண்டும். பழம், கனி, காய்கறிகள் உள்பட எல்லா விளைச்சலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை இருக்க வேண்டும்.

வட தமிழக மக்கள் மீது பரபட்சம்

சென்னையில், வெள்ளம் வந்த போது வீட்டிற்கு ரூ. 6 ஆயிரம் வழங்கிய அரசு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்ட போதும் ரூ. 6 ஆயிரம் வழங்கியது. ஆனால், வட தமிழகமான விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் வீட்டிற்கு ரூ. 2 ஆயிரம் தருகிறது. அதுவும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்கு தான் தருகிறார்கள். சரியான முறையில் பணம் போய் சேரவில்லை. வெள்ளம் வர காரணமே திமுக அரசுதான். சாத்தனூர் அணையை விடியற்காலை முன் அறிவிப்பு இல்லாமல் 20 ஆயிரம் கன அடி திறந்த காரணத்தினால் தான் தூங்கி இருந்த மக்கள் வெளியேறிவிட்டனர். முதலமைச்சர் வட தமிழக மக்கள் மீது பரபட்சம் காட்டுகிறார்.

சென்னையில் அன்புமணி பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

டங்ஸ்டன் சுரங்கம்

மதுரை டங்ஸ்டன் சுரங்கம் திறக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில அரசும் முடிவு செய்து உள்ளது. மக்கள் போராட்டம் காரணமாக நிறுத்தி இருக்கிறது. முதலமைசராக இருக்கும் வரை டங்ஸ்டன் திறக்க விட மாட்டேன் என்று சொல்லும் ஸ்டாலினுக்கு, கடலூர் நிலக்கரி சுரங்கத்திற்கு ஏன் கோபம் வரவில்லை. மதுரை, கடலூரில் விவசாயம் செய்ய கூடிய 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை அழித்து விட்டனர். இன்னும் 50 ஆயிரம் ஏக்கர் அழிக்க துடித்து கொண்டு இருக்கிறார்கள். இனி தமிழ் நாட்டில் நிலக்கரி சுரங்கம் தோண்ட அனுமதிக்க மாட்டோம் என்று முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட வேண்டும். மதுரைக்கு ஒரு நியாயம் கடலூருக்கு ஒரு நியாயமா? எல்லாமே விவசாய நிலம் தானே. கடலூர் மக்கள் குறித்து முதலமைச்சர் கவலைப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு

நாடாளுமன்றம் நடந்ததால் தான் பேச முடியும். தொடங்கியதில் இருந்து 4 வாரமாக ஒத்திவைத்து விட்டனர். அரசியல் சாசன விவாதம் 2 நாள் மட்டும் தான் நடந்தது. சமூக நீதி, மீனவர்கள் பிரச்சனை, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பேசினேன். நாடாளுமன்றத்தில் தள்ளு முள்ளு நடந்தது. ஆனால் அங்கு நான் இல்லை.

அம்பேத்கர் கொள்கை வழிகாட்டி

அம்பேத்கார் எங்கள் கட்சியின் கொள்கை வழிகாட்டி. திமுக தொடங்கிய காலத்தில் அம்பேத்கர் பெயரை ஒரு முறை கூட சொன்னது கிடையாது. அரசியல் வாக்குகளுக்காக சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் தான் எங்களின் கொள்கை வழிகாட்டி. அம்பேத்கர் சிலையை வீட்டில் வைத்து இருக்கிறோம். அம்பேத்கர் பற்றி யார் இழிவாக பேசினாலும் அதை கண்டிக்கிறோம். எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் தப்பு.

தமிழகத்தில் தொடர்ந்து சட்டம் கெட்டு வருகிறது. பள்ளியில் ஆசிரியர்கள் தாக்கப்படுகின்றனர். நீதிமன்றத்தில் தாக்கப்படுகின்றனர். இது காவல்துறையின் தோல்வியாக பார்க்கிறேன். காவல்துறை ஸ்டாலினிடம் உள்ளது. கஞ்சா, மது தான் காரணம். இதை தடை செய்ய முடியவில்லை.

செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்து விட்டார். செந்தில் பாலாஜி மீது முதலமைச்சரே நிறைய ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தார். சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த நாள் அமைச்சராக என்ன காரணம். அவர் அமைச்சராக இல்லை என்றால் தமிழ்நாடு இயங்காதா? திமுக இயங்க முடியாதா? 400 நாள் சிறையில் இருந்து வெளியே வந்து அமைச்சரானதும் சாட்சிகளை மிரட்ட மாட்டாரா? நாங்கள் கேட்ட கேள்வியை தான் உச்ச நீதிமன்றம் கேட்டு உள்ளது'' என இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated : Dec 24, 2024, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.