ETV Bharat / state

இந்தி படிக்க வேண்டும் என்று நிர்பந்தம் கிடையாது; 'தமிழை நேசியுங்கள்' - இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் சு. முருகன்! - HINDI IS NO COMPULSION

தமிழும், ஆங்கிலமும் இரு மொழி கல்வி. இந்தி தேவைப்பட்டால் படித்துக் கொள்ளுங்கள், படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது என இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன்
இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 22, 2025, 9:03 PM IST

தூத்துக்குடி: வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும்போது ஆங்கிலம் உதவும். இந்தி தேவைப்பட்டால் படித்துக்கொள்ளுங்கள், படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது விருப்ப பாடம் மட்டுமே என்று இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமை வகித்த இந்நிகழ்ச்சியில், இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

விழாவில், இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் பேசுகையில், “ இஸ்ரோ 1963ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அணுசக்தி துறையின் அங்கமாக இருந்த இஸ்ரோ 1969 ஆம் ஆண்டு தனித்துறையாக செயல்பட்டு வருகிறது. முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய நாடு ரஷ்யா. நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு இந்தியா.

இஸ்ரோ துணை திட்ட இயக்குநர் வீராணம் சு.முருகன் பேட்டி (ETV Bharat Tamil Nadu)
இதையும் படிங்க: ரூ.10,000 கோடி கொடுத்தாலும்...தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

அரசு பள்ளியில் தான் நான் பயின்றேன். பள்ளியில் நான் முதல் மாணவன். ஆனால், தூத்துக்குடி பாலிடெக்னிக் கல்லூரியில் கடைசி இடம் தான் எனக்கு கிடைத்தது. எனினும், பாலிடெக்னிக் முடிக்கும் போது முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றேன். இன்று அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்துள்ளது. மேற்படிப்பு படிக்கும்போது, மாணவர்கள் பேசுகின்ற ஆங்கிலம் மற்றும் அதனால் ஏற்படுகின்ற பிரச்னைகளை சந்திக்கும் நிலை எனக்கு ஏற்பட்டது.

தமிழை நேசியுங்கள்:

படிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் அவர்களோடு போட்டி போடுகின்ற திறமையை வளர்த்துக் கொண்டேன். தமிழ்நாட்டை விட்டு நான் வெளியில் சென்று 40 ஆண்டுகளாகிறது. மற்ற இடங்களில் ஆங்கிலத்தில் பேசுகிறேன். ஆனால், தமிழை மறக்கக்கூடாது, தமிழை நன்கு படியுங்கள் தமிழ் மொழியை நேசியுங்கள். அரசு பள்ளியில் படித்தால் நமக்கு வேலை கிடைக்காது என்பது கிடையாது.

இந்தி படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது:

மாநில அரசு கூறுவது போன்று, தமிழும் ஆங்கிலமும் நமக்கு இரு மொழி கல்வி. வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும்போது ஆங்கிலம் உதவும். இந்தி தேவைப்பட்டால் படித்துக்கொள்ளுங்கள். இந்தி என்பது படிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. அது விருப்ப பாடம். தமிழ் என்பது உயிர், தமிழை நேசியுங்கள் நன்றாக படியுங்கள். நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.