ஹரியானா: சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 60 பேர் மதுரா மற்றும் பிருந்தாவன் கோயில்களுக்கு பேருந்து மூலம் புனித யாத்திரை சென்றுள்ளனர். கோயிலுக்கு சென்று திரும்பியபோது ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் குண்ட்லி மனேசார் பல்வால் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த நிலையில், 20க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஊள்ளூர் மக்கள் பேருந்து தீப்பற்றி எரிவதை கண்டு, பேருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தும் கவனிக்காத ஓட்டுநர், பேருந்தை தொடர்ந்து ஓட்டியுள்ளார்.