டெல்லி: அதானி குழுமம் பண மோசடியில் பயன்படுத்தப்பட்ட இரு மறைமுக நிதிகளில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் குற்றம் சாட்டியது.
இந்த குற்றசாட்டை மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் இருவரும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ஹிண்டன்பெர்க் ரிசர்ச் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தின் கடல்சார் நிதியில் செபி தலைவர் மதாபி பூரி புச் மற்றும் அவரது கணவருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றசாட்டு வைத்தது.
மேலும், செபியின் தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளதாகவும் அதனால் தான் அதானி மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியது.
அதோடு, செபி அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் போனதற்கு செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்ததே காரணம் என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.