ஒடிசா: 147 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் நான்கு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அதேபோல, 21 மக்களவைத் தொகுதிகளுக்குமான பொதுத்தேர்தலும் நடந்து முடிந்தது.
இதில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்துக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. இந்த நிலையில், இன்று அங்கு இரு தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடந்து வரும் நிலையில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி-ஐ பின்னுக்குத் தள்ளி 78 இடங்களில் முன்னிலையில் உள்ளது பாஜக.
இரண்டாம் இடத்தில் உள்ள பிஜேடி 54 இடங்களிலும், இந்திய தேசிய காங்கிரஸ் 11 இடங்களிலும் நீடிக்கின்றன. ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 இடங்கள் தேவைப்படும் சூழலில், பாஜக 78 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. இதனால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிஜேடி கட்சி 112 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.