தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு-காஷ்மீரில் 2019 தேர்தலை விட சரிந்த வாக்குப்பதிவு! - Lok Sabha Elections 2024 - LOK SABHA ELECTIONS 2024

Lok Sabha Elections 2024 Phase 2 in Jammu: 2-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தலில் ஜம்மு நாடாளுமன்றத் தொகுதியில் 72.32% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது 80.2% என 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய சதவிகிதத்தை விட 9.84% சரிவு ஆகும்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 27, 2024, 1:20 PM IST

ஜம்மு & காஷ்மீர்: நாடெங்கும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் ஒரே கட்டமாக நடைபெற்றது. அதன்படி, தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் 69.72 % வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல, 2-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலானது ஜம்மு & காஷ்மீர், கேரளா, கர்நாடகா அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்து முடிவடைந்தது.

அரசியலமைப்பு 370வது பிரிவு ரத்தான பிறகு நடந்த தேர்தல்:இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் முதல் முறையாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஜம்முவில் 72.32% வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.

இது ஜம்மு இந்தியாவுடன் இணைவதற்கு முன்பு தனி மாநில அந்தஸ்தில் இருந்தபோது 2019-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய 80.2% வாக்குப்பதிவை விடக் குறைவாகும். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்முவில் 80.2% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில், அம்மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்பட்டப் பின்னர் நடந்த இந்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக 1,781,545 வாக்காளர்களைக் கொண்ட ஜம்மு நாடாளுமன்றத் தொகுதிக்கு மட்டும் நடந்த 12 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 22 வேட்பாளர்கள் எம்பி பதவிக்காக இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்ததாக 3-ம் கட்ட நாடாளுமன்றத் தேர்தல் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி உட்பட 21 வேட்பாளர்கள் போட்டியிடும் அனந்த்நாக்-ரஜோரி நாடாளுமன்றத் தொகுதிகளும் அடங்கும். இதில், தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மியான் அல்தாப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் (2-ம் கட்டம்) ஜம்மு நாடாளுமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு விபரம் பின்வருமாறு:-

அக்னூர் (தனி) - 78.27%

பஹு - 62.34%

பிஷ்னா (தனி) - 76.54%

சாம்ப் - 75.76%

குலாப்கர் (ST) - 73.93%

ஜம்மு கிழக்கு - 66.11%

ஜம்மு வடக்கு - 67.29%

ஜம்மு மேற்கு - 62.82%

கலாகோட் - சுந்தர்பானி - 69.10%

மர் (தனி)- 79.31%

நக்ரோடா - 75.63%

ஆர்எஸ் புரா - ஜம்மு தெற்கு - 68.11%

ராம்கர் (தனி) - 75.27%

ரியாசி - 74.19%

சம்பா - 74.72%

ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி - 79.43%

சுசேத்கர் (தனி) - 75.94%

விஜய்ப்பூர் - 75.67%

மொத்தம்: 72.32%

அனந்த்நாக்-ரஜோரி, பாரமுல்லா, உதம்பூர், ஸ்ரீநகர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான (3-ம் கட்டம்) நாடாளுமன்றத் தேர்தல் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:மக்களவை தேர்தலை புறக்கணித்த ராஜஸ்தான் கிராமம்! என்ன காரணம்? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details