By ரவிசங்கர் நடராஜன் (Fairtrade2020india@gmail.com)
ஹைதராபாத்: தேவை, விநியோகத்துக்கு இடையேயான சரி சமம் இல்லாத நிலை, விலையில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. குறிப்பிட்ட அளவு அதிகம் விளைந்திருக்கிறது என்பதை நியாயப்படுத்த, எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என்பதை கண்காணிக்கும் எந்த ஒரு முறையும் இல்லாத நிலையில் கூடுதல் விளைச்சல் காரணமாக விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கான விலை குறைந்திருக்கிறது என்று ஒவ்வொருவரும் நம்புகின்றோம். 10 சதவிகிதம் அளவுக்கு கூடுதல் வரத்து அல்லது அப்படி கூடுதல் வரத்து வந்திருக்கிறது என்ற வதந்தி கூட 50 சதவிகிதம் விலை குறைவதற்கு போதுமானதாக இருக்கிறது. இது முழுமையாக விவசாயிகளுக்கு எதிரான நேர்மையற்ற மோசடியாகும்.
விவசாயிகள் புறக்கணிப்பு: உற்பத்தி செய்யப்பட்ட வேளாண் விளைபொருட்கள் சீசன் தருணத்தில் கிடைப்பது என்பது அதன் தரத்துடன் இணைந்திருப்பதால் அது சந்தையில் விவசாயிகளை பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. தக்காளி, வெங்காயம், மாம்பழம் உள்ளிட்ட வேளாண் பொருட்களின் விலை நிலவரம் இது போல இருப்பதை நாம் பார்க்க நேரிடுகிறது.
![ஒடிசா மாநிலத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் அறுவடை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/20241223202l_1302newsroom_1739430812_152.jpg)
வரலாற்றுரீதியாகவே மண்டிகளில் நடைபெறும் ஏல முறையில் வேளாண் விளை பொருளின் விலை என்பது வர்த்தகர்களின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாகவே இருக்கிறது. இது குறித்து விவசாயிகள் ஒன்றும் சொல்லாமல் வாய்மூடி மவுனம் காக்கும் நிலையே உள்ளது. ஏல முறையில் விலையை நிர்ணயித்தல் என்ற முறை என்பது விற்பனையாளரின் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக விவசாயிகளை புறக்கணிக்கும் வகையில் உள்ளது. விவசாயிகள் மற்றும் வாங்குவோர் மண்டிகளுக்கு அப்பால் விற்பனை செய்வதை அனுமதிக்கும் வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு (APMC) சட்டத்தின் வரம்புக்குள் பல பொருட்கள் பட்டியலிடப்படவில்லை. எனினும் அவர்களின் பேரம் பேசும் அதிகாரம் சிறந்ததாக இல்லை.
தகுந்த முறை வாயிலாக விலையை நிர்ணயிக்கும் உரிமையை பெறுவதற்கான தேவை விவசாயிகளுக்கு உள்ளது. சந்தையில் பலியாக்கப்படுவதில் இருந்து விவசாயிகளை காப்பதில் எந்த ஒரு சாத்தியமான நடைமுறைகளை வழங்கக் கூடியதாக இருக்காது என்பது வெறுமனே பரந்த தன்மை மற்றும் பிரச்னைகளாக அர்த்தம் கொள்ள முடியாது. எந்த விவசாயிகள் ஒவ்வொன்றுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை கேட்கின்றனர் என்ற அச்சம், அரசானது சந்தையை முறைப்படுத்துவது அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுவது என்ற அர்த்தகம் கொண்டதல்ல என்பது பதிலாக இருக்க முடியாது.
![ஹைதராபாத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை மினிலாரிகளில் எடுத்துச் செல்கின்றனர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13-02-2025/20250212004l_1302newsroom_1739430812_117.jpg)
விவசாயிகளை பாதுகாக்கும் அமெரிக்கா: சந்தையில் விவசாயிகள் பாதிக்கப்படுவதற்கு எதிராக அமெரிக்க அரசு அவர்களை பாதுகாக்கிறது. அழுகும் பொருட்களை உற்பத்தி செய்யக் கூடியவர்களுக்காக வேளாண் நியாயமான நடைமுறைகள் சட்டம் 1968 அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு எண்ணிக்கையிலான தனிப்பட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருட்கள் என்று இந்த சட்டம் வாதத்தை முன் வைக்கிறது. ஆகவே சட்டத்தால் அதிகாரம் பெற்ற கூட்டுறவு அமைப்புகளில் சுதந்திரமாக தாங்களாவே ஒன்றிணைய வேண்டும். அப்படி இல்லாமல், தனிப்பட்ட விவசாயிகள் சந்தை மற்றும் பேரம் பேசும் நிலையில் வெற்றி பெற முடியாத படி பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் இன்றைக்கு கூட தக்காளி, பாதாம் பருப்பு உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு பேரத்தில் ஈடுபடுவதற்கான கவுன்சில்கள் உள்ளன. தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களுக்கு ஏற்ற விலைக்கான பேரத்தில் விவசாயிகள் கூட்டாக பேரத்தில் ஈடுபட இவை உதவுகின்றன.
ஆஸ்திரேலியா போட்டி ஆணையத்தில், வேளாண் சந்தை பொருட்கள் விற்பனையை கையாள இயக்குநர் ஒருவர் உள்ளார். விவசாயிகளிடம் இருந்து அழுகும் தன்மை கொண்ட பொருட்களை வாங்கும் கொள்முதலாளர்களின் இந்த விலைதான் இல்லையெனில் விலகுங்கள் என்ற போக்குக்கு எதிராக, இந்த போட்டி ஆணையம் பேரம் நடத்தும் கவுன்சில்களுக்கு ஆதரவு தருவதுடன் தீவிரமாக அதனை முன்னெடுத்து வருகிறது. நிச்சயமற்ற விலை விஷயத்தில் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய வேளாண் சந்தைகளுக்கு வழிமுறைகள் தேவை.
கூட்டு பேர கவுன்சில்: விவசாயிகளை பாதுகாப்பானதை வழங்கும் நோக்கம் கொண்டதாக, நிர்ணயிக்கப்பட்ட விலையை தீர்மானிப்பதற்கு பங்கெடுப்புடன் கூடிய முறையின் வாயிலாக, வர்த்தகர்களின் நலனுக்கு பலி ஆகாமல் தடுக்கும் வகையில், ஏலங்கள் மற்றும் பேரத்துக்கான பேச்சுவார்த்தைகள் எப்போதும் போல தொடர்ந்து செயல்படும் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட விலையை விட குறைவானதாக இருக்கக் கூடாது. மண்டிகளில் நடக்கும் ஏலத்தின் விலை மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் மாம்பழங்கள் செயலாக்கத்தைப் பொறுத்தவரை, ஒருமுறை மட்டும் மறு ஆய்வு செய்யும் வகையிலான ஒரு பருவகாலத்தில் ஒரு விலையை நிர்ணயிக்கும் வகையிலான முடிவை கூட்டு பேர கவுன்சில் மேற்கொள்ளலாம்.
சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தளத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட விலையின் மீது விவசாயிகள், வர்த்தகர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம். வர்த்தக ஒப்பந்தம் அல்லது எந்த ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட கூலி பேர ஒப்பந்தம் என்ற முறையில் ஒரு ஒப்பந்தமாக பேச்சுவார்த்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை அமல்படுத்தலாம். கூட்டு பேர கவுன்சிலின் அதிகாரம், செயல்பாடு , அமைப்பு ஆகியவை மாநில வேளாண் சந்தை சட்டங்கள்/ வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழு சட்டத்தின் விதிகளின் கீழ் சேர்க்கப்பட வேண்டும். இந்த செயல்பாட்டுக்கு குறைவு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தும் வகையிலான விதிகள் சேர்க்கப்பட வேண்டும்.
பேரத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் முடிவு, கூட்டு பேர கவுன்சிலின் பேர விலை ஒப்பந்தத்தை கட்டாயமாக்கும் விதிகள் வழியாக பாதுகாக்கப்படுவதாக இருக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும். அத்துடன் வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்தல் குழுவின் வரம்புக்கு உள்ளே மற்றும் வெளியே உள்ள லைசென்ஸ் பெற்ற வாங்குவோர் அனைவரும்/தனியார் சந்தைகள், ஏலமுறைகள், நேரடி விவசாயிகள் கொள்முதல், வர்த்தகர்கள் அல்லது மின்னணு சந்தை அல்லது எந்த ஒரு விலை சந்தை இடங்களை கட்டுக்குள் கொண்டுவருவதாகவும் இருக்க வேண்டும். வசதி அளித்தல் என்ற பங்கை மட்டும் அரசு வகிக்க வேண்டும். ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு ஏற்பட நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தை திகழ வேண்டும். அரசால் நிர்வகிக்கப்படும் விலையாக இருக்கக்கூடாது.
தோத்தாபுரியில் பரிசோதனை முயற்சி: தோத்தாபுரி மாம்பழங்களில் இதனை பரிசோதனை முறையில் செயல்படுத்தப்படுகிறது. இதன் விலை அடிக்கடி மாற்றத்துக்கு உட்படுவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். உள்ளூர் நிர்வாகம் மூலம் இந்த முறையில் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும் அவை மேலும் விளைவுடன் கூடியதாக இல்லை. சட்ட அதிகாரம் இன்றி உள்ளது. வேளாண் சந்தை சட்டத்தின் கீழ் உள்ளூர் முயற்சியாக என்பது மட்டுமின்றி அமல்படுத்தும் அதிகாரம் இன்றி சில குறிப்பிட்ட விதிமுறைகளுடன் அதன் விதிகளுக்கு உட்பட்டு இப்போது பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
இந்த செயல்பாடுகளின் ஒரு பகுதியாக அண்டை மாநிலங்களில் இருந்து ஆதரவை பெறும் வகையில் கவனமான நகர்வை முன்னெடுக்க வேண்டும். தோத்தாபுரி மாம்பழங்கள் மாநில எல்லைகளைத் தாண்டியும் பிராந்தியத்துக்குள் ஒரே மாதிரியான விலை இருப்பதை உறுதி செய்யும் வகையில் அவற்றை ஒருங்கிணை்க்க வேண்டும். இந்த அனுபவத்தின் அடிப்படையில் இதர காய்கறி மற்றும் பழ வகைகளுக்கும் இந்த முறையை விரிவாக்கலாம்.
(இந்த கட்டுரையின் ஆசிரியர், விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்பு சந்தை இணைப்புகளின் அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். இவர், இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவில் விரிவான வேளாண் வணிக அனுபவத்தைக் கொண்டுள்ளார், தற்போது சர்வதேச மேம்பாட்டு நிறுவனங்களுக்கான ஆலோசகராக உள்ளார்.)