புவனேஷ்வர்: ஒடிசா முதலமைச்சராக மோகன் சரண் மாஜி ஒடிசா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ராஜ்நாத் சிங் தலைமையிலான் தேர்வு கமிட்டி மோகன் சரண் மாஜியை முதலமைச்சராக தேர்வு செய்து அறிவித்துள்ளது.
4 முறை எம்எல்ஏவான மோகன் சரண் மாஜி, மாநிலத்தின் பழங்குடியின மக்களின் முகமாக அறியப்படுகிறார். நடப்பு சட்டப் பேரவை தேர்தலில் கியோஞ்சர் தொகுதியில் போட்டியிட்டு அவர் போட்டியிட்டார். ஜூன் 12ஆம் தேதி அவர் ஒடிசா முதலமைச்சராக அவர் பொறுப்பேற்று கொள்கிறார்.
18வது மக்களவை தேர்தலுடன் சேர்த்து ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் பிஜூ ஜனதா தளத்தை பின்னுக்குத் தள்ளி பாஜக ஆட்சியை கைப்பற்றியது. 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டப்பேரவையில் பாஜக 74 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது.
கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜூ ஜனதா தளம் 51 இடங்ளில் மட்டும் வெற்றி பெற்றும் தோல்வியை தழுவியது. வாக்கு எண்ணிக்கை நடைபெற்று ஒரு வார காலம் ஆன நிலையிலும், ஒடிசாவில் முதலமைச்சரை தேர்வு செய்வதில் பாஜக இடையே கடும் இழுபறி நீடித்து வந்தது.
இதனிடையே பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 3வது முறையாக கடந்த 9ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டது. பிரதமர் மோடியுடன் சேர்த்து 72 பேர் மத்திய அமைச்சர், இணை அமைச்சர், தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.