தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல் - டீசல் விலை தலா ரூ.2 குறைப்பு..! நாளை முதல் அமல்..! - petrol diesel price cut Rs 2

Petrol Diesel Price Rs 2 cut: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா 2 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிவித்துள்ளது.

Petrol Diesel Price Rs 2 cut
Petrol Diesel Price Rs 2 cut

By PTI

Published : Mar 14, 2024, 9:43 PM IST

Updated : Mar 14, 2024, 10:54 PM IST

டெல்லி:நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையினை உயர்த்தி ஏறக்குறைய இரண்டு வருட கால இடைவெளிக்குப் பிறகு தற்போது, பெட்ரோல் மற்றும் டீசலின் விலைகள் லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைக்கப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட இந்த விலை நாளை (மார்ச் 15) காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இன்று (மார்ச் 14) தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலைக் குறைப்பு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், தனது 'X' வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் அடிப்படையில், தேசிய தலைநகரான டெல்லியில் பெட்ரோல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.96.72 ஆக இருந்துவரும் நிலையில், லிட்டருக்கு ரூ.2 குறைந்து ரூ.94.72 ஆகவும், டீசல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.89.62 ஆக இருந்துவரும் நிலையில் லிட்டருக்கு ரூ.2 குறைந்து ரூ.87.62 ஆகவும் விற்பனையாக உள்ளது.

இதேபோல தமிழகத்தைப் பொறுத்தவரையில், பெட்ரோல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.102.63 ஆக இருந்துவரும் நிலையில் லிட்டருக்கு ரூ.1.88 குறைந்து ரூ.100.75 ஆகவும், டீசல் விலை தற்போது லிட்டருக்கு ரூ.94.24 ஆக இருந்துவரும் நிலையில், லிட்டருக்கு ரூ.1.9 குறைந்து ரூ.92.34 ஆகவும் விற்பனையாக உள்ளது.

இதையும் படிங்க:ஆட்டோமேட்டிக் கார்களை விட மேனுவல் கார்களை தான் இந்தியர்கள் விரும்புகிறார்களா? - என்ன காரணம்..

Last Updated : Mar 14, 2024, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details