ETV Bharat / bharat

உ.பி.ஆன்மிக நிகழ்வில் தற்காலிக மேடை சரிந்து 7 பேர் பலி! - TEMPORARY STAGE COLLAPSES

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பத் மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினரின் லட்டு மகா உஸ்தவம் விழாவின் போது மரக்கட்டைகளால் ஆன தற்காலிக மேடை சரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் மேடை சரிந்து விபத்து (Image credits-PTI)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2025, 7:00 PM IST

பாக்பாத்(உ.பி): உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் மேடை சரிந்ததில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர்.

பாக்பாத் நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள பராத் நகரின் காந்தி சாலையில் உள்ள ஸ்ரீதிகாம்பர் ஜெயின் பட்டபடிப்பு கல்லூரி மைதானத்தில் ஸ்ரீ1008 ஆதிநாத் பக்தாம்பர் பிரச்சார் என்ற பெயரில் மோக்சா கல்யாணக் நிர்வாண மகா உற்சவத்தின் ஒரு பகுதியாக ஆதிநாத் அபிஷேகம் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர்.

மரக்கட்டைகளால் கட்டமைக்கப்பட்டிருந்த 65 அடி உயர தற்காலிக மேடை திடீரென உடைந்து விழுந்தது. அப்போது மேடையில் இருந்தவர்களும் மேடையை ஒட்டி இருந்தவர்களும் மரக்கட்டைகளின் அடியில் சிக்கிக் கொண்டனர். மேடை சரிந்து விழுந்த சமயத்தில் ஒரே நேரத்தில் பலர் நெருக்கடியடித்துக் கொண்டு சென்றதால் ஏற்பட்ட நெரிசலில் பலர் காயம் அடைந்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.. இலங்கை தூதரை அழைத்து வன்மையாக கண்டித்த ஒன்றிய அரசு!

இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால், காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கே 20 பேருக்கு முதல் உதவி செய்யப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். மீதம் உள்ளோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 7 பேர் உயிரிழந்தனர்.

நிகழ்விடத்தில் இருந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து பேசும் போது, காயம் அடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவி கிடைக்கவில்லை என்றனர். காவல்துறை கண்காணிப்பாளர் அர்பித் விஜய்வா்கியா, நிகழ்வு நடத்தியவர்கள் முன் அனுமதி பெற்றிருந்தனர். எனினும், எவ்வாறு இந்த விபத்து நடந்தது குறித்து விசாரணை செய்து வருகின்றோம்.

இந்த நிகழ்வு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்தியாநாத், காயம் அடைந்தவர்கள் உரிய சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார். இந்த சம்பவத்துக்கு உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அரசின் நிர்வாக தோல்வியே இந்த விபத்துக்கு காரணம் என்று சமாஜ்வாதி கட்சியின் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.