நாக்பூர் :இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பில் கேட்ஸ், தேநீர் கடை உரிமையாளருடன் உரையாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்செண்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்ச்சி குஜராத்தில் நாளை (மார்ச்.1) தொடங்குகிறது.
இதில் பங்கேற்பதாக பில் கேட்ஸ் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் நகரில் சாலையோர டீ கடையில் பில்கேட்ஸ் ஒரு சாய் ப்ளீஸ் என்று கேட்டு டீ குடித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு சாய் ப்ளீஸ் என்று கேட்கும் பில் கேட்ஸ் கடை உரிமையாளரின் தனித்துவமான டீ தயாரிக்கும் முறை ரசித்தவாறே, அவருடன் உரையாடி டீ பருகுவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.